குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் ஜூன் 19 முதல் 21 வரை லடாக்கில் பயணம் மேற்கொள்கிறார்

प्रविष्टि तिथि: 18 JUN 2026 2:45PM by PIB Chennai

லடாக் யூனியன் பிரதேசத்தில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் ஜூன் 19 முதல் 21 வரை முதலாவது அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார்.

இப்பயணத்தின் போது, ஜூன் 20 அன்று துடிப்புமிக்க கிராமமான லுகுங் செல்லும் அவர், அங்கு சுயஉதவிக் குழுவினருடன் உரையாடுகிறார்.  துடிப்புமிக்க கிராமங்கள் திட்டத்தின் கீழ், எல்லைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்  பணிகளை பார்வையிடுகிறார். அதன் பின், போர்நினைவிடம் செல்லும் குடியரசு துணைத்தலைவர், அங்கு மரியாதை செலுத்துகிறார்.

ஜூன் 21 அன்று லே பகுதியில் நடைபெறும் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களில் குடியரசு துணைத்தலைவர் கலந்து கொள்கிறார். யோகா மூலம் ஏற்படும் ஒட்டுமொத்த ஆரோக்கியம், நலன் குறித்த  செய்தியை ஊக்குவிக்கும் வகையில், இந்நிகழ்வில், இளைஞர்கள், ஆயுதப்படையினர், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். 

***

(Release ID: 2274542) 

SS/IR/KPG/SH 


(रिलीज़ आईडी: 2274833) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam