டிஜிட்டல் தளங்கள் பார்வையாளர்களை சென்றடைய புதிய வழிகளை ஏற்படுத்தி உள்ளது - பிஜூ பட்நாயக் திரைப்படம், தொலைக்காட்சி நிறுவனத்தலைவர் பேராசிரியர் ஹிமான்சு சேகர் கதுவா
மும்பை சர்வதேச திரைப்படவிழாவில் இளம் இயக்குநர்கள் ஆவணப் படங்களை மறுவரையறை செய்கிறார்களா என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. பிரபல திரைப்பட இயக்குநர் திரு பிரபால் கவுண்ட், எழுத்தாளரும் இயக்குநருமான ப்ரீத்தி சர்மா, வளர்ந்து வரும் இளம் இயக்குநர் சமாப்தி தாஸ், மூத்தத் திரைப்பட இயக்குநரும் கல்வியாளருமான பேராசிரியர் ஹிமான்சு சேகர் கதுவா ஆகியோர் இதில் பங்கேற்றனர். புதிய தலைமுறையைச் சேர்ந்த கதை கூறுவோர் தங்களுடைய புதிய பார்வைகள், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், சமூக எதார்த்தங்கள் மீதான அர்ப்பணிப்பு மூலம் ஆவணப்படத்துறையை எவ்வாறு மறுவடிவமைப்பு செய்கிறார்கள் என்பதை இந்த அமர்வு விளக்கியது.
இந்த அமர்வில் உரையாற்றிய பிஜூ பட்நாயக் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (ஒடிசா) தலைவரான பேராசிரியர் ஹிமான்சு சேகர் கதுவா, தற்போது இளம் இயக்குநர்களுக்கு திரைப்பட தயாரிப்புக் கருவிகளும் தளங்களும் மிக எளிதாக கிடைப்பதாகக் கூறினார். அவர்கள் ஒரு கதைக்கருவை உருவாக்கியவுடன் உடனடியாக படப்பிடிப்பைத் தொடங்குகிறார்கள் என்றும் கடந்த தலைமுறையினரைப்போல அவர்கள் தங்களுடைய படைப்புகளை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்த திரைப்படவிழாக்களை முழுமையாக சார்ந்திருப்பதில்லை என்றும் தெரிவித்தார். டிஜிட்டல் தளங்கள் பார்வையாளர்களை சென்றடைய புதிய வழிகளை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274628®=3&lang=1
****
TV/IR/KPG/SH
रिलीज़ आईडी:
2274830
| Visitor Counter:
9