MIFF banner

ஒவ்வொரு குழந்தைக்குமான குரலாக திரைப்படம் அமைய வேண்டும்: திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஸ்வேதா பரக், ஜிதேந்திர மிஸ்ரா கருத்து

மும்பை சர்வதேசத் திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக, பத்திரிகை தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில், மக்களிடையே பல்வேறு விஷயங்கள் குறித்த புரிதலை வளர்ப்பது, பன்முகத்தன்மையைக் கொண்டாடுவது, இதுவரை கேட்கப்படாத குரல்களை வெளிப்படுத்துவது ஆகியவற்றில் திரைப்படங்கள் ஏற்படுத்தும் வலுவான தாக்கம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

'நயாப் – த்ரூ தி டீச்சர்ஸ் லென்ஸ்' என்ற ஆவணப்படம், 'சோனா ஔர் சோனம் கே சப்னே' என்ற குறும்புனைவுத் திரைப்படம் ஆகியவற்றுடன் தொடர்புடைய திரைப்படத் தயாரிப்பாளர்கள், கல்வியாளர்கள் அனைவரும், ஒவ்வொரு குழந்தைக்கும் அதிகாரம் அளிக்கும் ஊடகமாகத் திரைப்படம் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

இந்த நிகழ்வில் திரைப்படத் தயாரிப்பாளர் ஸ்வேதா பரக், கல்வியாளரும் திட்ட வழிகாட்டியுமான சுவாதி போபட் வாட்ஸ், புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரும் திட்ட வழிகாட்டியுமான பாதிக் வாட்ஸ், தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் ஜிதேந்திர மிஸ்ரா ஆகியோர் பங்கேற்றனர். இக்குழுவினர் திரைப்படங்களின் உருவாக்கம் குறித்த தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதுடன், குழந்தைகளிடையே அனைவரையும் உள்ளடக்கிய மனப்பான்மை, படைப்பாற்றல்,  தன்னம்பிக்கை ஆகியவற்றை வளர்ப்பதில் கதைசொல்லலின் பங்களிப்பு குறித்தும் விவாதித்தனர்.

கதைசொல்லலின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய 'நயாப் – த்ரூ தி டீச்சர்ஸ் லென்ஸ்' படத்தின் இயக்குனர் ஸ்வேதா பரக், குழந்தைகள்  யதார்த்த நிலைகளைத் திரையில் காண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். உள்ளூர் கலாச்சாரங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகள், குழந்தைகள் தங்களது அடையாளம், பாரம்பரியம், சமூகண்களுடன் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள உதவுகின்றன என்று அவர் குறிப்பிட்டார். இத்தகைய கதைகள் சுய-வெளிப்பாடு மற்றும் உரையாடலுக்கான அர்த்தமுள்ள சூழலையும் உருவாக்குகின்றன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274149&reg=3&lang=1

(Release ID: 2274149)

****

TV/SV/SH


Great films resonate through passionate voices. Share your love for cinema with #MIFF2026. Tag us @pibmumbai on X, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at miff.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


रिलीज़ आईडी: 2274273   |   Visitor Counter: 10