மும்பை சர்வதேச திரைப்பட விழாவில், ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் நாடகக் கலை குறித்து ஃபேப்ரிஸ் கேலி விளக்கினார்
மும்பை சர்வதேச திரைப்பட விழாவில், பிரெஞ்சு நாடகக் கலைஞர் ஃபேப்ரிஸ் கேலி, புகழ்பெற்ற நாடகக் கலைஞர் கான்ஸ்டான்டின் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் கருத்துக்கள் வழியாக வாழ்க்கை, வார்த்தைகள், நடிப்பு ஆகியவற்றுக்கு இடையேயான ஆழமான தொடர்பை ஆராய்ந்தார். நடிப்பு என்பது அதன் முழு செழுமையையும் மீண்டும் உருவாக்கும் ஒரு முயற்சி என்றும், அதில் மனித அனுபவத்தின் வெவ்வேறு நிலைகளில் உணர்ச்சிகள் இயல்பாக வெளிப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
"நன்றாக நடிக்க, வாழ்க்கையை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்," என்று வலியுறுத்திய கேலி, ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் அணுகுமுறை உன்னிப்பான கவனிப்பு, பகுப்பாய்வு, மனித நடத்தையைப் பற்றிய ஆழமான புரிதலில் வேரூன்றியிருந்தது என்று விளக்கினார்.
ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் கைவினைத்திறனைப் பற்றிப் பேசிய கேலி, வாழ்க்கையை விரிவாக புரிந்து, சூழ்நிலைகளை அவற்றின் மிகச்சிறிய கூறுகளாகப் பிரித்து, இயல்பான காட்சிகளை உருவாக்கும் அவரது திறனை எடுத்துரைத்தார்.
ஸ்டானிஸ்லாவ்ஸ்கி, ஆன்டன் செக்கோ என்ற ஒரு சிறந்த நாடக நண்பரை கண்டார் என்றும், செக்கோவின் எழுத்துக்கள் சூழ்நிலைகளையும், வாழ்க்கை தன்னை வெளிப்படுத்தும் நுட்பமான வழிகளையும் அடிப்படையாகக் கொண்டிருந்தன என்றும் அவர் விளக்கினார்.
ஒரு உண்மையான காட்சியை உருவாக்க வளமான சொற்களஞ்சியம் தேவை, ஏனெனில் வார்த்தைகள் புலனுணர்வை வடிவமைக்கின்றன என்று கேலி கூறினார். நடிப்பு என்பது வெறும் வார்த்தைகளை மட்டும் சார்ந்திருக்க முடியாது என்று கேலி தெளிவுபடுத்தினார்.
நடிப்பின் அடித்தளங்கள் அன்றாட வாழ்வில் இயல்பாகவே உள்ளன என்றும், வாழ்க்கையில், நாம் அனைவரும் சிறந்த நடிகர்கள் என்றும் கூறி அவர் தனது உரையை நிறைவு செய்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274001®=3&lang=1
****
TV/IR/RJ/SH
रिलीज़ आईडी:
2274232
| Visitor Counter:
6