ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில், ரயில் போக்குவரத்து சேவையை வலுப்படுத்துவதற்கான கட்டமைப்பு பணிகளுக்காக ஆதிப்பூர்-புஜ் இடையே இரட்டைவழித்தடம் அமைக்கும் திட்டத்திற்கு இந்திய ரயில்வே ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 17 JUN 2026 2:30PM by PIB Chennai

குஜராத் மாநிலத்தில், ரயில்வே உள்கட்டமைப்பு, போக்குவரத்துத் திறனை மேம்படுத்தும் வகையில், மேற்கு ரயில்வேயின் ஆதிப்பூர்-புஜ் இடையே 49 கி.மீ நீளத்திற்கு இரட்டைவழித்தடம் அமைக்கும் ரூ.493 கோடி செலவிலானத் திட்டத்திற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.

கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மூலம் ரயில் போக்குவரத்துத் திறனை அதிகரிக்கும் திட்டத்தின் கீழ், இந்தத் திட்டம்  மேற்கொள்ளப்படுகிறது. உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழித்தடத்தில், இரட்டைவழித்தடம் அமைப்பது, கட்ச் பகுதியில் ரயில் போக்குவரத்துக்கான இணைப்பை வலுப்படுத்துவதுடன், பயணிகள்,  சரக்கு போக்குவரத்தில் எதிர்காலத் தேவைகளை சமாளிக்கவும் உதவிடும்.

காந்திதாம்-நலியா வழித்தடத்தின் ஒரு பகுதியாக உள்ள ஆதிப்பூர்-புஜ் வழித்தடம், தற்போது ஒற்றை வழித்தடமாக உள்ளது. இப்பகுதியில் ஏற்கனவே நடைபெற்று வரும் பல்வேறு ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்களால், இப்பகுதியில் போக்குவரத்து கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புஜ்-நலியா வழித்தடம் அகலப்பாதையாக்கப்படுவது, நலியா-வாயோர் வழித்தட நீட்டிப்பு, நலியா-ஜக்காவ், வாயோர்-லக்பத், தேஷல்ப்பர்-லுனா ஆகிய பகுதிகளை இணைக்கும் புதிய ரயில் வழித்தடம் ஆகியவை இதில் அடங்கும்.

இத்திட்டங்கள் நிறைவடையும் நிலையில், புஜ்-ஆதிப்பூர் வழித்தடம் வழியாகக் கூடுதல் பயணிகள், சரக்கு போக்குவரத்து நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ரயில் திறனை உறுதி செய்யவும், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், எதிர்காலப் போக்குவரத்துத் தேவையைப் பூர்த்தி செய்யவும் ஏதுவாக இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273960&reg=3&lang=1

***

SS/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2274201) வருகையாளர் எண்ணிக்கை : 55
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu , Kannada