ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரூ. 755 கோடி மதிப்பிலான சம்பா-கோர்பா மூன்றாவது ரயில்பாதை திட்டத்திற்கு இந்திய ரயில்வே ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 16 JUN 2026 7:32PM by PIB Chennai

இந்தியாவின் நிலக்கரி வளம் மிக்க பகுதிகளில் ரயில்வேயின் போக்குவரத்துத் திறனை மேம்படுத்தும் முயற்சியில் ஒரு முக்கிய நடவடிக்கையாக, தென்கிழக்கு மத்திய ரயில்வேயின் 42 கி.மீ தூரமுள்ள சம்பா-கோர்பா இடையிலான மூன்றாவது ரயில்பாதை திட்டத்திற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கான மதிப்பு ரூ. 755 கோடியாகும்.

 

இந்தத் திட்டத்தின் கீழ், ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட மத்வாரானி-சரக்புண்டியா பகுதியைத் தவிர்த்து, சம்பா மற்றும் கோர்பா இடையே மூன்றாவது ரயில் பாதை அமைக்கப்படும். சரக்குப் போக்குவரத்தை வலுப்படுத்துவதையும், நாட்டின் வளர்ந்து வரும் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட இந்திய ரயில்வேயின் '3000 மில்லியன் டன் சரக்குகளைக் கையாளும் திறன்' மற்றும் 'அதிக அடர்த்தி கொண்ட ரயில் வழித்தட' (HDN) திட்டங்களின் கீழ் இந்த வழித்தடம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

 

இந்த மூன்றாவது ரயில்பாதைத் திட்டம், சரக்கு மற்றும் பயணிகள் ரயில்களைக் கையாளும் திறனை கணிசமாக அதிகரிப்பதுடன், செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தி, அவற்றின் விரைவான இயக்கத்தையும் உறுதி செய்யும். வலையமைப்புத் திறனை விரிவுபடுத்துவதற்கும், சரக்குப் போக்குவரத்துத் திறனை மேம்படுத்துவதற்கும், பயணிகள் சேவைகளை மேம்படுத்துவதற்கும், நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி மேம்பாட்டு இலக்குகளுக்கு ஆதரவளிப்பதற்கும் இந்திய ரயில்வே மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் மற்றுமொரு குறிப்பிடத்தக்க முயற்சியாக சம்பா–கோர்பா மூன்றாவது வழித்தடத் திட்டம் அமைந்துள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273711&reg=3&lang=1

(Release ID: 2273711)

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2273796) வருகையாளர் எண்ணிக்கை : 43
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , English , Urdu , Marathi , Punjabi , Gujarati , Kannada