சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாரிஸ் ஒப்பந்தத்தின்படி கூட்டுக் கரிமப் படிம வழிமுறை அமலாக்க விதிகளை இந்தியாவும் ஜப்பானும் ஏற்றுக்கொண்டுள்ளன

प्रविष्टि तिथि: 16 JUN 2026 3:02PM by PIB Chennai

இந்தியாவும்,  ஜப்பானும், பருவநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு மாநாட்டின்  பாரிஸ் ஒப்பந்தம் 6.2-வது பிரிவின் கீழ்கூட்டுக் கரிமப் படிம வழிமுறை அமலாக்க விதிகளை’ 08.06.2026 அன்று ஏற்றுக்கொண்டுள்ளன.

கடந்த ஆண்டுஇந்தியாவும் ஜப்பானும் கூட்டுக் கரிமப் படிம வழிமுறைக்கான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம்இந்தியாவில் நீடித்த வளர்ச்சிக்கான விளைவுகளை ஆதரிப்பதோடுதேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட இரு நாடுகளின் பங்களிப்புகளை அடைவதற்கும் உதவும். அதற்கேற்பபசுமைக் குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் அல்லது அகற்றும் நடவடிக்கைகளில் ஒத்துழைப்பதற்கான கட்டமைப்பையும் இது நிறுவியுள்ளது.

அமலாக்க விதிமுறையானதுஇரு அரசுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு கூட்டுக் குழுவெளிப்படையான திட்ட ஒப்புதல் நடைமுறைகள்மூன்றாம் தரப்பு சரிபார்ப்பு மற்றும் உறுதிப்படுத்தல்நீடித்த வளர்ச்சிக்கான பாதுகாப்பு,  படிமங்களை வழங்குதல், பரிமாற்றத்தைக் கண்காணிப்பதற்கான தேசியப் பதிவேடுகள் உள்ளிட்ட வலுவான நிர்வாக ஏற்பாடுகளை வரையறுக்கிறது.

கூட்டுக் கரிமப் படிம வழிமுறையானதுபருவநிலை மாற்ற நடவடிக்கைகளில் இந்தியாவின் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. இதுபருவநிலை மாற்றத் தணிப்பு, நீடித்த வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும். மேலும்இந்தியாவில் குறைந்த கார்பன் தொழில்நுட்பங்கள் சம்பந்தப்பட்ட திட்டங்களுக்கான முதலீடுதொழில்நுட்பப் பரிமாற்றம், திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும்.

***

(Release ID: 2273527)

SS/SMB/SH

 


(रिलीज़ आईडी: 2273694) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati , Malayalam