உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முதல் கட்டம் 23 மாநி்லங்கள் / யூனியன் பிரதேசங்களில் நிறைவடைந்தது

प्रविष्टि तिथि: 16 JUN 2026 2:25PM by PIB Chennai

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027-ன் முதல் கட்டத்தின் கீழ், வீடுகள் குறித்த கணக்கெடுப்புக்கான களப் பணிகள் இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் இன்று தொடங்கியது. இதற்காக கணக்கெடுப்பாளர்கள் 2026 ஜூலை 15 வரை  அனைத்து வீடுகளுக்கும் செல்லவுள்ளனர். கேரளா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தொடங்கியுள்ள சுய கணக்கெடுப்பு வசதி 2026 ஜூன் 30 வரை நடைபெறும்.  அம்மாநிலங்களில் வீடுகள் குறித்த கணக்கெடுப்பு 2026 ஜூலை 1 முதல் 30 வரை நடைபெறவுள்ளது. மாநிலங்களில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் அதிகாரப்பூர்வ சுயகணக்கெடுப்புப் பக்கமான se.census.gov.in என்ற பக்கம் மூலம் சுயகணக்கெடுப்பை நிறைவு செய்யலாம்.

வீடு தோறும் சென்று கணக்கெடுக்கும் பணிகள் தற்போது குஜராத், உத்தரப்பிரதேச மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், லடாக், புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களில் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்பகுதிகளில் சுய கணக்கெடுப்பை நிறைவு செய்த குடியிருப்பாளர்கள் அதற்கான அடையாள ஆதாரத்தை  வீட்டிற்கு வருகை தரும் கணக்கெடுப்பாளர்கள் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதற்கிடையே, மகாராஷ்டிரா, மேகாலயா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் மற்றும் தில்லியில்  2026 மே 16 முதல் ஜூன் 14 வரை  நடைபெற்ற வீட்டுக் கணக்கெடுப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273506&reg=3&lang=1

***

SS/IR/KPG/KR

 


(रिलीज़ आईडी: 2273570) आगंतुक पटल : 215
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Kannada , Malayalam