மருந்துகள் துறை
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி ஆட்சியின் 12 ஆண்டுகள்: உலகளாவிய சிக்கல்களுக்கு இடையே இந்தியாவை தற்சார்பு உர மையமாக மாற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 14 JUN 2026 6:22PM by PIB Chennai

கடந்த 12 ஆண்டுகளாக பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், உரத்துறை மகத்தான மைல்கற்களை எட்டியுள்ளது. இது இந்தியாவை முழுமையான தன்னிறைவை நோக்கி வழிநடத்துவதோடு, முன்னெப்போதும் இல்லாத உலகளாவிய சந்தை சீர்குலைவுகளிலிருந்து விவசாயிகளைப் பாதுகாத்து வருகிறது.

மேற்கு ஆசியாவில் நிலவும் கடுமையான புவிசார் அரசியல் மோதல்களால் உர விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருந்த போதிலும், இயற்கை எரிவாயுவுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த போதிலும், கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் பெரும் தாமதம் ஏற்பட்டிருந்த போதிலும், மத்திய அரசு உரங்களின் விநியோகத்தைத் தடையின்றி உறுதி செய்வதற்காக, ஒரு செயலூக்கமான, போர்க்கால அளவிலான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

12 ஆண்டுகால சாதனைகள் (2014–2026):

2014-ம் ஆண்டு முதல் ஆறு புதிய பிரம்மாண்ட யூரியா ஆலைகள் நிறுவப்பட்டு, அதன் மூலம் ஆண்டு உற்பத்தித் திறன் 76.2 லட்சம் மெட்ரிக் டன்களாக குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. மேலும், ஆண்டுக்கு 25.4 லட்சம் மெட்ரிக் டன்கள் ஒருங்கிணைந்த உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு உயர் திறன் யூரியா ஆலைகள் விரைவில் உற்பத்தியைத் தொடங்க உள்ளன.

பாஸ்பேட், பொட்டாசியம் வளர்ச்சி: யூரியாவின் வெற்றியைப் பிரதிபலிக்கும் வகையில், பாஸ்பேட், பொட்டாசியம் உர உற்பத்தியானது 2014-15-ம் ஆண்டில் 159.54 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்ததிலிருந்து கணிசமாக அதிகரித்து, 2024-25-ம் ஆண்டில் 211.22 லட்சம் மெட்ரிக் டன் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியது.

ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றிக் கப்பல் போக்குவரத்துத் தாமதங்களைக் கையாள்வதற்காக, அரசு மாற்றுப் போக்குவரத்து வழிகளை விரைவாக ஆராய்ந்ததுடன், உலகளாவிய உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக மூலப்பொருட்களைப் பெறுவதற்கான வழிமுறைகளையும் மேற்கொண்டது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் நேரடி வழிகாட்டுதலின் கீழ், ஏழு செயலாளர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில் உரத்துறைச் செயலாளர் 10 உயர்மட்ட ஆய்வுக் கூட்டங்களுக்குத் தலைமை வகித்தார். இக்குழுக்கள், அமைச்சகங்களுக்கு இடையேயான தடையற்ற ஒருங்கிணைப்பிற்கு உத்தரவாதம் அளித்ததுடன், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து உள்நாட்டு இயற்கை எரிவாயு விநியோகப் பிரச்சனைகளையும் தீர்த்தன.

வரலாற்றுச் சிறப்புமிக்க கூடுதல் கையிருப்பு: வேளாண்மை துறையால் மறுமதிப்பீடு செய்யப்பட்ட 383.9 லட்சம் மெட்ரிக் டன்கள் என்ற மொத்தத் தேவைக்கு எதிராக, வரவிருக்கும் 2026 கரீஃப் பருவத்திற்கான கையிருப்பு, இன்றைய நிலவரப்படி சுமார் 195.79 லட்சம் மெட்ரிக் டன்களாக (51%க்கும் மேல்) உள்ளது.

சர்வதேச பணவீக்க அதிர்ச்சிகளைத் தாங்கிக்கொண்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு விவசாயிகளின் நலன்களுக்கு முதலிடம் அளித்துள்ளது. புவிசார் அரசியல் பிரச்சனைகளால் உலகளாவிய விலைகள் கடுமையாக உயர்ந்தபோதிலும், இந்திய விவசாயிகளுக்கான உரங்களின் சில்லறை விலை ஒரு பைசா கூட உயர்த்தப்படவில்லை.

 

யூரியா: உலகச் சந்தையில் ஒரு மூட்டையின் விலை ரூ 4100-ஐத் தாண்டியுள்ள நிலையில், இந்திய விவசாயிகள் 45 கிலோ மூட்டையை வெறும் ரூ 266.5 என்ற பெரும் மானிய விலையில் தொடர்ந்து பெற்று வருகின்றனர்.

டிஏபி: உலகளவில் 50 கிலோ மூட்டைக்கு ரூ 5,000-க்கும் அதிகமான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இது இந்திய விவசாயிகளுக்கு வெறும் ரூ 1,350-க்குக் கிடைக்கிறது.

மத்திய அரசின் மிகவும் பயனுள்ள, உத்திசார்ந்த முன்முயற்சிகள் மூலம், உள்நாட்டு உர உற்பத்தி தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு, நாடு ஒரு வலுவான, தடையற்ற இருப்பை உறுதி செய்கிறது. இந்த விரிவான தயார்நிலை, நமது மக்களின் முக்கிய விவசாயத் தேவைகள் தடையின்றிப் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்கிறது. மேலும், அவர்களுக்கு அத்தியாவசிய உரங்களை மிகவும் மலிவாக, மானிய விலையில், நம்பகமான, சிரமமற்ற முறையில் வழங்குகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272694&reg=48&lang=1

***

SS/PLM/KR

 


(रिलीज़ आईडी: 2273514) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी , Gujarati , Kannada , Malayalam