மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கர்நாடக மாணவர் குழுவின் ராஜஸ்தான் கல்விச் சுற்றுலா

प्रविष्टि तिथि: 15 JUN 2026 6:56PM by PIB Chennai

இளைஞர் சங்கமம் ஆறாம் கட்டத் திட்டத்தின் கீழ், தார்வாட் இந்திய தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமாணவர் குழு ராஜஸ்தானில் கல்வி மற்றும் கலாச்சாரச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஜெய்ப்பூர் மாளவியா தேசிய தொழில்நுட்பக் கழகம் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தது.

 

இந்தக் குழுவினர் ராஜஸ்தான் ஆளுநர் திரு.ஹரிபாவ் கிசான்ராவ் பாக்லேயைச் சந்தித்துப் பேசினர். ஆளுநர், இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மையை மதிக்கவும், நாட்டு வளர்ச்சிக்காகத் தீவிரமாகப் பணியாற்றவும் மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

 

பயணத்தின்போது, மாணவர்கள் ராஜஸ்தானின் வரலாற்றுச் சின்னங்கள், நாட்டுப்புறக் கலைகள் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை நேரில் கண்டு மகிழ்ந்தனர். மேலும், ஜெய்ப்பூர் மாளவிய தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி வசதிகளைப் பார்வையிட்ட அவர்கள், அங்குள்ள தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், தொழில் முனைவோர் நடவடிக்கைகள் குறித்துப் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டனர். ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்தச் சுற்றுலா, மாணவர்களிடையே தேசிய ஒருமைப்பாட்டையும், மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவையும் வலுப்படுத்தும் விதமாக அமைந்தது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273173&reg=3&lang=1

செய்தி அடையான எண்:2273173

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2273288) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Kannada