உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நீட் மறுதேர்வு 2026: பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை செயலாளர் உயர்மட்ட ஆலோசனை

இடுகை இடப்பட்ட நாள்: 15 JUN 2026 8:58PM by PIB Chennai

நீட் மறுதேர்வு முன்னேற்பாடுகள் குறித்து, மத்திய உள்துறை செயலாளர் இன்று புதுதில்லியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

 

இந்தக் கூட்டத்தில் ரயில்வே வாரியத் தலைவர், உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித் துறை செயலாளர்கள், அஞ்சல் துறை செயலாளர், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, சிவில் விமானப் பாதுகாப்பு அலுவலகம் ஆகியவற்றின் தலைமை இயக்குநர்கள் மற்றும் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

தேர்வு பாதுகாப்பு நெறிமுறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதையும், தேர்வு எந்தவிதக் குறைபாடும் இன்றி நடைபெறுவதையும் உறுதி செய்யுமாறு அனைத்து மாநில அரசுகள் மற்றும் மத்திய அமைப்புகளுக்கு உள்துறை செயலாளர் உத்தரவிட்டார். மாணவர்கள் தடையின்றிப் பயணம் செய்வதற்கான வசதிகளைச் செய்து தருமாறு மாநிலங்களுக்குக் கேட்டுக்கொள்ளப்பட்டது. மாணவர்களின் பயணத்திற்குத் தேவையான முழு ஒத்துழைப்பை வழங்குவதாக ரயில்வே வாரியத் தலைவர் உறுதியளித்தார்.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273259&reg=3&lang=1

செய்தி அடையான எண்:2273259

****

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2273280) வருகையாளர் எண்ணிக்கை : 48
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Odia , Kannada , Malayalam