இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
தேசிய விளையாட்டு வாரியத்திற்கான தேடல் மற்றும் தேர்வுக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது
प्रविष्टि तिथि:
15 JUN 2026 6:02PM by PIB Chennai
மத்திய அரசு இன்று (15.06.2026) தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம், 2025-ன் கீழ், தேசிய விளையாட்டு வாரிய (தேடல் மற்றும் தேர்வுக் குழு) விதிகள், 2026-ன் படி, தேசிய விளையாட்டு வாரியத்திற்கான தேடல் மற்றும் தேர்வுக் குழுவை அமைத்துள்ளது.
தேடல் மற்றும் தேர்வுக் குழுவிற்கு, அமைச்சரவைச் செயலாளர் டாக்டர் டி.வி. சோமநாதன் தலைவராக இருப்பார். மேலும், இக்குழுவில் விளையாட்டுத் துறைச் செயலாளர் திரு ஹரி ரஞ்சன் ராவ், விளையாட்டு நிர்வாகி லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஹர்பால் சிங் (இந்திய ஒலிம்பிக் சங்கம்), தேசிய விளையாட்டு விருது பெற்ற இருவரான திரு ககன் நரங், செல்வி என். குன்ஜரனி தேவி ஆகியோர் இடம்பெறுவார்கள்.
இந்தக் குழுவானது, விளையாட்டு நிர்வாகம், விளையாட்டுச் சட்டம், அது தொடர்பான பிற துறைகளில் அறிவு அல்லது நடைமுறை அனுபவம் பெற்ற, திறமை, நேர்மை, நற்பெயர் கொண்ட நபர்களைத் தேர்வு செய்து, வாரியத்தின் தலைவர், இரண்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான பெயர்ப் பட்டியலைப் பரிந்துரைக்கும் பணியை மேற்கொள்ளும்.
அமைச்சகத்தால் தேடல் மற்றும் தேர்வுக் குழு அமைக்கப்படுவதன் மூலம், பொறுப்பான அதிகார அமைப்பாகச் செயல்படும் தேசிய விளையாட்டு வாரியத்தின் தலைவர், உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை தொடங்கும்.
(Release ID : 2273130)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2273251)
आगंतुक पटल : 15