புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
2026 மே மாதத்திற்கான தொழிலாளர் ஆய்வு மாதாந்திர அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
15 JUN 2026 4:00PM by PIB Chennai
மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் நடத்தப்படும் காலமுறை தொழிலாளர் ஆய்வுக் கணக்கீடு, வேலைவாய்ப்பு, வேலையின்மை நிலைகள் குறித்த தரவுகளின் முதன்மை ஆதாரமாக விளங்குகிறது. நாட்டின் தொழிலாளர் சக்தி குறியீடுகளின் மாதாந்திர மதிப்பீடுகளை வழங்குவதற்காக, இந்தக் கணக்கெடுப்பு முறையானது ஜனவரி 2025 முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கணக்கீட்டின் மாதாந்திர முடிவுகள், மாதாந்திர அறிக்கைகள் வடிவில் வெளியிடப்படுகின்றன.
ஏப்ரல் 2025 முதல் ஏப்ரல் 2026 வரையிலான மாதாந்திர அறிக்கைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டன. மே 2026-க்கான தற்போதைய மாதாந்திர அறிக்கை, இந்தத் தொடரில் பதினான்காவதாக இப்போது வெளியிடப்பட்டு உள்ளது.
இதன் முக்கிய அம்சங்கள்:
* 15 வயது, அதற்கு மேற்பட்டோருக்கான தொழிலாளர் பங்கேற்பு விகிதம், ஏப்ரல் 2026-ல் 55.0% ஆக இருந்த நிலையில், மே 2026-ல் 54.4% ஆகப் பதிவாகியுள்ளது. கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும், இது முறையே 56.6%, 49.8% ஆக உள்ளது.
* நகர்ப்புறங்களில் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு பெருமளவில் நிலையாக உள்ளது. 2026 மே மாதத்தில், பெண்களுக்கான தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 32.8% ஆக இருந்தது. கிராமப்புறங்களில் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 36.7% ஆகப் பதிவானது.
* ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், நகர்ப்புறங்களில் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் சீராக இருந்தது.
* மே 2026-ல் நகர்ப்புற தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 46.6% என்ற அளவில் பெரும்பாலும் நிலையாக இருந்தது.
* அகில இந்திய அளவில், மாதாந்திர மதிப்பீடுகள், மொத்தம் 3,73,887 நபர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன.
* கிராமப்புறங்களில் கணக்கெடுப்பு செய்யப்பட்ட நபர்கள் - 2,13,294
* நகர்ப்புறங்களில் கணக்கெடுப்பு செய்யப்பட்ட நபர்கள் - 1,60,593
மே, 2026-க்கான மாதாந்திர அறிக்கை அமைச்சகத்தின் இணையதளமான https://www.mospi.gov.in -ல் உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272969®=3&lang=1
***
(Release ID : 2272969)
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2273152)
வருகையாளர் எண்ணிக்கை : 62