PIB Backgrounder
azadi ka amrit mahotsav

வலுவான இளைஞர்கள், வலிமையான தேசம்: வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தொலைநோக்குப் பார்வை

प्रविष्टि तिथि: 13 JUN 2026 1:02PM by PIB Chennai

2014 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில், கல்வி, திறன் மேம்பாடு, தொழில்முனைவு, விளையாட்டு, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இளைஞர்களை மையமாகக் கொண்ட முயற்சிகளை அரசு விரிவுபடுத்தியது. 2020-ம் ஆண்டின் தேசியக் கல்விக் கொள்கை, இளைஞர் தலைமையிலான மேம்பாடு என்ற தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் கல்விக்கான அணுகலை விரிவுபடுத்தி உயர்கல்வியை வலுப்படுத்தியது. மேலும் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளையும் விரிவாக்கியது. 2.3 லட்சத்திற்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களுடன், இந்தியாவின் புத்தொழில் சூழலமைப்பும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்தது. டிஜிட்டல் தளங்கள், அனைவரையும் உள்ளடக்கிய திட்டங்கள், சமூகப் பங்கேற்பு ஆகியவற்றின் மூலம், நாட்டின் இளைஞர்கள் பலமான சக்தியாக உருவெடுத்து வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்குப் பங்களித்து வருகின்றனர்.

 

 மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 65 சதவீதம் பேர் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதால், இந்தியா தனது வரலாற்றில் ஒரு திருப்புமுனையான தருணத்தில் உள்ளது. இந்த இளையோரின் மகத்தான ஆற்றலை அரசு உணர்ந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளில், இந்தியாவின் இளைஞர்களை தேசிய வளர்ச்சியின் மையமாக மாற்றுவதற்கான ஒரு முயற்சி பிரதிபலிக்கிறது. கல்வி, திறன் மேம்பாடு, விளையாட்டு, தொழில்முனைவு உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் இந்த மாற்றம் தெளிவாகத் தெரிகிறது.

 

2014-ம் ஆண்டின் தேசிய இளைஞர் கொள்கை, நாட்டில் இளைஞர் மேம்பாட்டிற்கான அடித்தளக் கட்டமைப்பை வழங்கியது. அது, 15 முதல் 29 வயதுக்குட்பட்ட தனிநபர்களை இளைஞர்கள் என வரையறுத்து, கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, சுகாதாரம், விளையாட்டு, சமூகப் பங்கேற்பு, அதிகாரமளித்தல் போன்ற முக்கியத் துறைகளை அடையாளம் கண்டது.

 

இந்த அடித்தளத்தின் மீது, அரசு கடந்த சில ஆண்டுகளில் இளைஞர்களை அரசுத் திட்டங்களின் பயனாளிகளாக மட்டும் அங்கீகரிக்காமல், தேசத்தைக் கட்டமைப்பதில் செயல்மிகு பங்காளர்களாகவும் அங்கீகரித்து, இளைஞர் தலைமையிலான வளர்ச்சிக்கான ஒரு தொலைநோக்குப் பார்வையை முன்வைத்துள்ளது.

 

சமீபத்தில் முன்மொழியப்பட்ட தேசிய இளைஞர் கொள்கை 2025 ஆனது கட்டமைப்பு, எதிர்காலத்திற்குத் தயாரான திறன்கள், தொழில்முனைவு, தலைமைத்துவம், டிஜிட்டல் பங்கேற்பு, நிலையான வளர்ச்சி போன்ற முன்னுரிமைகளை மேலும் வலியுறுத்துகிறது.

 

சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் கல்வி அணுகுமுறை குறிப்பிடத்தக்க அளவில் மாறியுள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020 இந்த மாற்றத்திற்கு அடித்தளமாக அமைகிறது. இது நாடு முழுவதும் உள்ள சம்பந்தப்பட்ட தரப்பினருடன் விரிவான கலந்தாலோசனைகள் மூலம் உருவாக்கப்பட்ட முதல் முழுமையான கல்விக் கொள்கையாகும்.

 

புதிய கல்விக் கொள்கையானது, உயர்கல்வியை அணுகுதல், வழங்குதல் முறைகளை மாற்றியமைத்துள்ளது. நெகிழ்வான, டிஜிட்டல் வசதி கொண்ட, புதுமைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கல்வி முறையின் மூலம் இந்திய இளைஞர்கள் தற்போது அதிகாரம் பெற்று வருகின்றனர்.

 

2015-ல் தொடங்கப்பட்ட திறன் இந்தியா இயக்கம் , திறன் மேம்பாட்டு மையங்களின் விரிவான கட்டமைப்பு மூலம் திறன் திறன் பயிற்சிகளை வழங்குகிறது. திறன் இந்தியா இயக்கத் திட்டம் திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, அரசு பல முக்கியத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது:

 

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நாடு முன்னேறி வரும் வேளையில், அதற்கான அடித்தளம் உறுதியாக அமைக்கப்பட்டுள்ளது. தேசத்தை முன்னோக்கி வழிநடத்திச் செல்வதற்குத் தேவையான கல்வி, திறன்கள், தன்னம்பிக்கை, வாய்ப்புகளுடன் இளைஞர் சக்திக்கு உத்வேகம் அளிக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272408&reg=48&lang=1

 

***

(Release ID : 2272408)

TV/PLM/KR


(रिलीज़ आईडी: 2272856) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Nepali , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati , Malayalam