நிதி அமைச்சகம்
தங்கக் கடத்தல் கும்பல்களிடமிருந்து சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பிலான, 17 கிலோ வெளிநாட்டுத் தங்கம் பறிமுதல்
प्रविष्टि तिथि:
13 JUN 2026 7:59PM by PIB Chennai
தங்கக் கடத்தல் கும்பலுக்கு எதிரான ஒரு முக்கிய நடவடிக்கையாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ), கொல்கத்தா மற்றும் அகர்தலாவில் ஒருங்கிணைந்த சோதனைகளை மேற்கொண்டது. இதில் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பிலான, சுமார் 17 கிலோ வெளிநாட்டுத் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இதில் தொடர்புடைய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
12.06.26 அன்று, தாய்லாந்திலிருந்து கொல்கத்தா விமான நிலையம் வழியாக 17 கோடி ரூபாய் மதிப்பில் 11.6 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற கும்பல் ஒன்றை கொல்கத்தாவில் டிஆர்ஐ அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, அவர்களிடமிருந்த தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் ஒரு பெண் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே நாளில், இந்தியா - பங்களாதேஷ் எல்லையின் திரிபுரா பகுதி வழியாகக் கடத்தப்பட்ட, சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பில் 5.1 கிலோ வெளிநாட்டுத் தங்கத்தையும், அகர்தலாவில் டிஆர்ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர், மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272546®=48&lang=1
***
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2272810)
आगंतुक पटल : 7