மக்களவை செயலகம்
பாரம்பரியம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பின் மூலம் வேளாண்மையில் முன்னணி நாடாக இந்தியா உருவெடுக்கும் : மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா
प्रविष्टि तिथि:
13 JUN 2026 7:15PM by PIB Chennai
2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுக்கும் பயணம், நாட்டின் பண்ணைகள், வயல்கள், கிராமங்கள் வழியாகவே அமைந்துள்ளன என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். புதுதில்லியில் நடைபெறும், “வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான நிலையான வேளாண்மை: பாரம்பரியம், தொழில்நுட்பம், உறுதியான விளைவுகள்” என்ற தலைப்பிலான இரண்டு நாள் தேசிய மாநாட்டின் தொடக்க அமர்வில் அவர் உரையாற்றினார்.
நிலையான வேளாண்மை, புத்தாக்கம், ஆராய்ச்சி ஆகியவை வளர்ச்சியடைந்த இந்தியாவின் அடித்தளமாக அமைகின்றன என்று அவர் தெரிவித்தார். பாரம்பரிய அறிவை நவீன தொழில்நுட்பத்துடன் இணைப்பது, இந்தியாவை ஒரு உலகளாவிய வேளாண் தலைமைத்துவ நாடாக மாற்ற உதவும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவில் விவசாயம் என்பது தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், வாழ்க்கை முறையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது என்று குறிப்பிட்டார். உணவுப் பாதுகாப்பு, கிராமப்புறச் செழிப்பு, சமூக நல்லிணக்கம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றை உறுதி செய்வதன் மூலம், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு விவசாயம் மையமாகத் திகழும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் கிராமங்களே நாட்டின் உண்மையான பலம் என்றும் நமது விவசாயிகள் நமது பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாகத் தொடர்ந்து விளங்குகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
பருவநிலை மாற்றம் உள்ளிட்ட மாறிவரும் உலகளாவிய சூழல்களால் ஏற்படும் சவால்களை அவர் சுட்டிக்காட்டினார். அறிவியல் சார்ந்த, ஆராய்ச்சி ஆதரவு பெற்ற, புதுமைகளை அடிப்படையாகக் கொண்ட வேளாண்மையே தற்போதைய தேவை என்று திரு ஓம் பிர்லா வலியுறுத்தினார். நீடித்த, லாபகரமான ஒரு வேளாண் சூழல் அமைப்பை உருவாக்குவதற்கு, காலத்தால் மாறாத பாரம்பரிய அறிவை நவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
இந்திய விவசாயத்துறையின் எதிர்காலத்திற்கு முதன்மைத் தூண்களாக வேளாண் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், விஞ்ஞானிகள், புதுமைப் படைப்பாளர்கள் ஆகியோர் உள்ளதாக திரு பிர்லா கூறினார். ட்ரோன்கள், செயற்கை நுண்ணறிவு, தரவுப் பகுப்பாய்வு, டிஜிட்டல் விவசாயம் போன்ற அடுத்த தலைமுறைத் தொழில்நுட்பங்கள், விவசாயத்தை மேலும் துல்லியமாகவும் உற்பத்தித்திறன் மிக்கதாகவும் ஆக்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், கிராமப்புற வளர்ச்சியை விரைவுபடுத்தவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், வேளாண் சார்ந்த தொழில்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள்கள், வேளாண் புத்தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றை விரிவுபடுத்த வேண்டியதன் அவசரத் தேவையையும் திரு ஓம் பிர்லா வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272533®=48&lang=1
***
(Release ID: 2272533)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2272807)
आगंतुक पटल : 4