அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்தியாவின் புத்தொழில் நிறுவன சூழல், சுமார் 25 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
प्रविष्टि तिथि:
13 JUN 2026 8:08PM by PIB Chennai
“வளர்ச்சியடைந்த இந்தியா 2047-க்கான புத்தாக்கம் & தொழில்முனைவால் இயக்கப்படும் வளர்ச்சி” என்ற கருப்பொருளில் பெங்களூருவில் நடைபெற்ற 'ரைஸ் மாநாடு 2026'-இல் உரையாற்றிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறைகளின் இணையமைச்சரும், (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறைகளின் இணையமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் புத்தொழில் நிறுவன இயக்கம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் ஒரு முக்கிய உந்துசக்தியாக உருவெடுத்துள்ளது என்று கூறினார். கடந்த தசாப்தத்தில் சுமார் 24 முதல் 25 லட்சம் வேலைவாய்ப்புகளை இந்த இயக்கம் உருவாக்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் நாட்டில் வெறும் 350 - 400 புத்தொழில் நிறுவனங்கள் மட்டுமே இருந்ததாகவும், இன்று இந்த எண்ணிக்கை சுமார் 2.3 லட்சமாக விரிவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் தொழில்முனைவுத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் குறிப்பிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் 50 சதவீதத்திற்கும் அதிகமான புத்தொழில் நிறுவனங்கள் தற்போது இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உருவாகி வருவதாகக் கூறினார். அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் தொழில்நுட்பத் திறன் கொண்ட தனிநபர்களுக்கு இன்று தொழில்முனைவுக்கான வாய்ப்புகள் அபரிமிதமாக உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272550®=48&lang=1
***
TV/RB/RJ
(रिलीज़ आईडी: 2272802)
आगंतुक पटल : 11