அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியல் சார்ந்த வளர்ச்சியை விரைவுபடுத்த, தொழில் துறைக்கும் கல்வித் துறைக்கும் இடையே வலுவான கூட்டுறவு அவசியம்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
प्रविष्टि तिथि:
13 JUN 2026 8:08PM by PIB Chennai
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறையின் இணையமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை மற்றும் பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், அறிவியல் சார்ந்த ஞானத்தை சந்தைக்கு ஏற்ற தீர்வுகளாகவும் தேசிய வளர்ச்சிக்கு உகந்த விளைவுகளாகவும் விரைவாக மாற்றுவதற்கு, ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில் துறை மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு இடையே ஆழமான ஒத்துழைப்பு தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.
'ரைஸ் மாநாடு 2026'-ன் ஒரு பகுதியாக நடைபெற்ற தொழில்துறை சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், அறிவியல் முன்னேற்றங்களை அவற்றின் சமூக மற்றும் பொருளாதாரத் தாக்கங்களின் அடிப்படையில் மதிப்பிட வேண்டிய ஒரு காலகட்டத்தில் இந்தியா நுழைந்துள்ளது என்று வலியுறுத்தினார். புதிய கண்டுபிடிப்புகள் வெறும் கருத்தாக்கச் செயல்முறை விளக்கம் என்ற நிலையைக் கடந்து, பெருமளவில் இறுதிப் பயனாளிகளைச் சென்றடைவதை உறுதிசெய்ய ஆய்வகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆகியவை நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
தொழில்துறைத் தலைவர்கள் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் தீவிரமாக இணைந்து செயல்படுமாறும், நாட்டின் அறிவியல் சார்ந்த முன்முயற்சிகளை வடிவமைப்பதில் பங்கேற்குமாறும் டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார். வெறும் அறிவைப் பெருக்குவது மட்டுமின்றி, வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில்துறை போட்டித்திறன் மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத்தரம் ஆகியவற்றில் பங்களிக்கும் வகையிலான தொழில்நுட்பங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தீர்வுகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2272552®=48&lang=1
***
TV/RB/RJ
(रिलीज़ आईडी: 2272645)
आगंतुक पटल : 5