பிரதமர் அலுவலகம்
தரமான சுகாதார சேவைகள், எளிதில் கிடைக்க கடந்த 12 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பிரதமர் எடுத்துரைத்துள்ளார்
प्रविष्टि तिथि:
14 JUN 2026 1:27PM by PIB Chennai
கடந்த 12 ஆண்டுகளாக, மக்களுக்குத் தரமான சுகாதார சேவைகள், குறைந்த செலவில் எளிதில் கிடைக்க இந்தியா பாடுபட்டுள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஏழை மக்களுக்கு உயர்தர சுகாதார சேவைகளை வழங்கும் உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைக் கொண்ட நாடு என்பதில் பெருமிதம் கொள்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் மக்கள் மருந்தகத் திட்டம் போன்ற பிற முயற்சிகள், மருந்துகளின் விலையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன என்று திரு நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார். ஸ்டென்ட்கள், முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகள் ஆகியவற்றுக்கான செலவு குறைந்துள்ளதாகவும், இது பலருக்கு உதவியுள்ளதாகவும் பிரதமர் எடுத்துரைத்துள்ளார்.
அதே நேரத்தில், இப்போது அதிகமான மருத்துவ நிறுவனங்களும், மருத்துவக் கல்வி இடங்களும் இருப்பதால், மருத்துவக் கல்வி, மக்களுக்கு எளிதில் கிடைக்கப்பெற்றுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். சுகாதாரத் துறை எவ்வாறு மாற்றம் அடைந்துள்ளது என்பதைப் பகிர்ந்துகொண்ட அவர், ஆரோக்கியமான இந்தியாவைக் கட்டமைப்பதற்காக, இதுவரை நாம் ஏற்படுத்தியுள்ள இந்த அடித்தளத்தைத் தொடர்ந்து வலுவாகக் கட்டியெழுப்புவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"கடந்த 12 ஆண்டுகளாக, தரமான சுகாதார சேவையை மலிவானதாகவும் எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதற்கு இந்தியா பாடுபட்டு வருகிறது.
ஏழை மக்களுக்கு உயர்தர சுகாதார சேவைகளை வழங்கும் உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைக் கொண்ட நாடு என்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.
பிரதமரின் மக்கள் மருந்தகம் போன்ற பிற முயற்சிகள் மருந்துகளின் விலையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. ஸ்டென்ட்கள், முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான செலவுகள் குறைந்துள்ளதால், இது பலருக்கு உதவியுள்ளது.
அதே நேரத்தில், அதிகமான மருத்துவக் கல்வி நிறுவனங்களும் மருத்துவக் கல்வி இடங்களும் இருப்பதால், மருத்துவக் கல்வி மக்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடியதாக மாறியுள்ளது.
ஆரோக்கியமான இந்தியாவைக் கட்டமைப்பதற்காக, இதுவரை நாம் அடைந்துள்ள அடித்தளத்தைத் தொடர்ந்து வலுவாக கட்டியெழுப்புவோம்."
***
(Release ID: 2272631)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2272634)
आगंतुक पटल : 64
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam