வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

13-வது பிரிக்ஸ் நகர்ப்புற மேம்பாட்டு மன்றக் கூட்டம் நிறைவு

प्रविष्टि तिथि: 12 JUN 2026 7:56PM by PIB Chennai

அனைவரையும் உள்ளடக்கிய, மக்களை மையப்படுத்திய நகர்ப்புற மேம்பாடு குறித்த அமைச்சர்கள் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதுடன், 13-வது பிரிக்ஸ் நகர்ப்புற மேம்பாட்டு மன்றக் கூட்டம் புதுதில்லியில் நிறைவடைந்தது.

2026-ம் ஆண்டில் இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ், வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் நடத்தப்பட்ட இந்த இரண்டு நாள் கருத்தரங்கம், 'மக்களுக்கான நகரங்கள்: நகர்ப்புற வளர்ச்சியில் பிரிக்ஸ் ஒத்துழைப்பு' என்ற கருப்பொருளில் நடைபெற்றது. பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள், மூத்த அரசு அதிகாரிகள், நகர்ப்புற வல்லுநர்கள் இதில் பங்கேற்றனர்.

இந்த இரண்டு நாள் கருத்தரங்கின் முடிவுகள், பிரிக்ஸ் நாடுகள், அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான சிறந்த நிர்வாகம் வாய்ந்த நகரங்களைக் கட்டமைப்பதற்கான ஒரு பொதுவான செயல் திட்டத்தை உருவாக்க ஒரு வழிகாட்டியாக அமையும்.

***

(Release ID: 2272320)

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2272557) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam