பாதுகாப்பு அமைச்சகம்
மகளிர் சக்தியின் பங்கேற்பு, விமானப் படையை மேலும் வலிமையானதாக்கும் - பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜநாத் சிங்
प्रविष्टि तिथि:
13 JUN 2026 11:08AM by PIB Chennai
ஹைதராபாத்தின், துண்டிகலில் உள்ள விமானப்படை அகாடமியில் பட்டம் பெற்றதைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு அகாடமியின் முதல் தொகுதி பெண்கள் உட்பட மொத்தம் 231 விமானப் பயிற்சி மாணவர்கள் (194 ஆண்கள், 37 பெண்கள்) விமானப்படையில் இன்று (13.06.2026) அதிகாரிகளாகப் பதவியேற்றனர். பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், 217-வது பயிற்சிப் பிரிவின் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பைப் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் இந்திய கடற்படையைச் சேர்ந்த ஒன்பது அதிகாரிகளுக்கும், இந்திய கடலோரக் காவல்படையைச் சேர்ந்த 03 அதிகாரிகளுக்கும், வியட்நாம் சோசலிச குடியரசைச் சேர்ந்த 02 அதிகாரிகளுக்கும் விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர், விமானப்படை தேசத்திற்கு ஒரு கேடயமாகவும் வாளாகவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்று கூறினார்.
புதிய சவால்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், சூழ்நிலைக்கேற்ப தங்கள் நடவடிக்கைகளை மாற்றியமைக்க வேண்டும் என்றும் திரு ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டார்.
நவீன போரில், எதிரியோ அல்லது பயன்படுத்தப்படும் ஆயுதமோ பெரும்பாலும் கண்ணுக்குத் தெரிவதில்லை என்று அவர் கூறினார். ரேடார்கள், செயற்கைக்கோள்கள், ட்ரோன்கள், சென்சார்கள், ரோபோடிக்ஸ் போன்ற அமைப்புகள், போரிடும் தரப்பினரையோ அல்லது அவர்களின் இயந்திரங்களையோ கண்டறிவதை சாத்தியமற்றதாக்குகின்றன என்று அவர் தெரிவித்தார். நிச்சயமற்ற தன்மைகளையும் எதிர்பாராத சவால்களையும் எதிர்கொள்ள பயிற்சித் திட்டங்களும் பயிற்சிகளும் நமது வீரர்களை நன்கு தயார்படுத்தியுள்ளன என்று அவர் கூறினார்.
எதிர்காலப் போர் முறைகளையும் உத்திகளையும் புரிந்துகொண்டு, அவற்றுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொண்டு, அவற்றை ஏற்றுக்கொண்டு, தேவைப்படும்போது மாற்றியமைக்குமாறு வீரர்களைப் பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தினார்.
பெண் அதிகாரிகளுக்குச் சிறப்பு வாழ்த்துக்களைத் தெரிவித்த பாதுகாப்புத் துறை அமைச்சர், மகளிர் சக்தியின் அதிகரித்து வரும் பங்களப்பு விமானப்படையை மேலும் வலுப்படுத்தி, அதனை மேலும் வலிமையானதாக மாற்றும் என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272390®=48&lang=1
***
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2272426)
आगंतुक पटल : 17