உள்துறை அமைச்சகம்
நடப்பாண்டிற்கான அமர்நாத் யாத்திரைக்கான முன்னேற்பாட்டு பணிகளை உள்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்
प्रविष्टि तिथि:
12 JUN 2026 5:06PM by PIB Chennai
நடப்பாண்டிற்கான அமர்நாத் யாத்திரைக்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று ஆய்வு மேற்கொண்டார். புதுதில்லியில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜீத் தோவல், மத்திய உள்துறை செயலாளர், ராணுவத்தளபதி, உளவுத்துறை இயக்குநர், ஜம்மு காஷ்மீர் தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை தலைவர், மத்திய ஆயுதக் காவல் படைகளின் இயக்குநர்கள், உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு, தடையற்ற பயண அனுபவத்தை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்தார்.
அனைத்து பாதுகாப்பு அமைப்புகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ட்ரோன்கள், சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள், இதர நவீன தொழில்நுட்பக் கருவிகள் மூலம் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். மேலும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை, மத்தியக் காவல்படைகள் உள்ளிட்ட அனைத்துப் பாதுகாப்பு அமைப்புகள் ஒருங்கிணைந்து யாத்திரை மேற்கொள்ளும் பகுதிகளில் பல்லடுக்கு பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். யாத்திரை செல்லும் பக்தர்களின் பதிவுகள், தங்குமிடம், சுகாதார வசதிகள், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய சேவைகளுக்கும் போதிய முன்னேற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் என்று திரு அமித் ஷா வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272199®=3&lang=1
***
TV/SV/KPG/RJ
(रिलीज़ आईडी: 2272259)
आगंतुक पटल : 8