விவசாயத்துறை அமைச்சகம்
அசாமின் வேளாண், ஊரக மேம்பாட்டுக்கான நிதியில் பற்றாக்குறை ஏதுமில்லை: திரு சிவராஜ் சிங் சௌகான்
प्रविष्टि तिथि:
02 JUN 2026 9:04PM by PIB Chennai
மத்திய வேளாண், விவசாயிகள் நலன், ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் புதுதில்லியில் இன்று அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா ஷர்மாவை சந்தித்து அம்மாநிலம் தொடர்பான விவகாரங்கள் குறித்து விவாதித்தார். இந்த உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் அசாமில் வேளாண், ஊரக மேம்பாட்டுத்துறையால் செயல்படுத்தப்படும் பல்வேறு மத்திய அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், அசாமின் வேளாண், ஊரக மேம்பாட்டுக்கான நிதி, வளங்கள் ஆகியவற்றில் பற்றாக்குறை ஏதுமில்லை என்று கூறினார். வேளாண் உள்கட்டமைப்பு நிதி, பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் – கிராமம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், இதர மத்திய அரசின் திட்டங்களின் பயன்களை உறுதி செய்வதற்கு அசாம் மாநிலத்திற்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
பின்னர் பேசிய அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா ஷர்மா, தமது மாநிலத்தின் வேளாண், ஊரக மேம்பாட்டிற்கு மத்திய அரசு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268170®=3&lang=1
***
SS/IR/RJ/RJ
(रिलीज़ आईडी: 2272189)
आगंतुक पटल : 6