கலாசாரத்துறை அமைச்சகம்
மங்கோலியாவில், புத்தரின் முதன்மை சீடர்களின் புனிதப் பொருட்கள்
प्रविष्टि तिथि:
31 MAY 2026 8:06PM by PIB Chennai
இந்திய-மங்கோலிய கலாச்சார மற்றும் ஆன்மீக உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக, புத்தரின் இரு முதன்மைச் சீடர்களான அர்ஹத் சரிபுத்திரர், அர்ஹத் மகாமொக்கல்லானா ஆகியோரின் புனிதப் பொருட்கள், இந்த ஆண்டு புத்த பூர்ணிமா அன்று, மங்கோலியாவின் உலான்பாத்தரில் உள்ள கந்தந்தெக்சென்லிங் மடாலயத்தில் சடங்குமுறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
2026 ஆம் ஆண்டு மே 31 முதல் ஜூன் 10 வரை பத்து நாள் கண்காட்சிக்காக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட புனிதப் பொருள்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள், சங்க உறுப்பினர்களால் ஆழ்ந்த மரியாதையுடன் வரவேற்கப்பட்டன. இந்தக் கண்காட்சி, அசாம் மாநில ஆளுநர் திரு லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா, மங்கோலியாவிற்கான இந்தியத் தூதர் திரு அதுல் மல்ஹரி கோட்சர்வே, மங்கோலிய அரசின் முக்கிய பிரமுகர்கள், பௌத்தத் தலைவர்கள், சர்வதேச பௌத்த கூட்டமைப்பின் பிரதிநிதிகள், இலங்கை மகாபோதி சங்கம், பௌத்த சமூகத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா, இந்த நிகழ்வை ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் என்று குறிப்பிட்டதுடன், இந்தப் புனிதப் பொருட்கள் ஞானோதயத்தின் வாழும் ஒளியை உள்ளடக்கி, அமைதி, கருணை, நல்லிணக்கம் ஆகிய உலகளாவிய செய்தியைத் தாங்கி நிற்கின்றன என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய மங்கோலியாவிற்கான இந்தியத் தூதர் திரு அதுல் மல்ஹாரி கோட்சர்வே, புத்தரின் அமைதி, நல்லிணக்கம், சமூக நீதி, பகுத்தறிவுச் சிந்தனை ஆகிய போதனைகளின் நீடித்த முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267312®=3&lang=1
***
SS/BR/RJ
(रिलीज़ आईडी: 2272170)
आगंतुक पटल : 21