புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
காற்றாலை மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் உலக காற்றாலை தின மாநாடு கோவாவில் நடைபெறவுள்ளது
प्रविष्टि तिथि:
12 JUN 2026 2:58PM by PIB Chennai
காற்றாலை மின் உற்பத்தித் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உலக காற்றாலை தின மாநாட்டை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. கோவாவில் இம்மாதம் 15-ம் தேதி நடைபெறவுள்ள இம்மாநாட்டில் மத்திய மின்சார ஆணையம், இந்திய சூரிய எரிசக்திக் கழகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை, தேசிய காற்றாலை மின் உற்பத்தி நிறுவனம், கிரிட் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
காற்றாலை உற்பத்தியில் இந்தியா உலகின் 4-வது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது. வரும் 2030-ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் காற்றாலை மின் உற்பத்தி செய்வதற்கும் 2035-ம் ஆண்டுக்குள் 155 ஜிகாவாட் மின் உற்பத்தி நிலையை அடைவதற்கும் 2070-ம் ஆண்டுக்குள் புதைபடிவமற்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் 500 ஜிகாவாட் என்ற இலக்கை எட்டுவதுடன் நிகர பூஜ்ய கார்பன் உமிழ்விற்காக இலக்கை அடையும் குறிக்கோளில் காற்றாலை மின் உற்பத்தி முக்கியப் பங்கு வகிக்கிறது.
நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கான உத்திசார் மையமாக காற்றாலை மின் உற்பத்தி திகழ்கிறது. 2025-26-ம் நிதியாண்டின் காற்றாலை மூலம் 6.1 ஜிகாவாட் மின் உற்பத்தித் திறன் உருவாக்கப்பட்டு சாதனைப் படைக்கப்பட்டுள்ளது. அரசின் வலுவான கொள்கை, தொழில்துறையின் ஒத்துழைப்புடன் எத்தகைய சாதனைகளையும் படைக்க முடியும் என்பதற்கு இது ஒரு உதாராணமாகத் திகழ்கிறது. ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதன் மூலம் உலக அளவிலான பொருளாதார வளர்ச்சியில் நிலை நிறுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளுக்கு அரசு உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை திரு பிரலஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272081®=48&lang=1
***
TV/SV/KPG/RJ
(रिलीज़ आईडी: 2272135)
आगंतुक पटल : 11