பாதுகாப்பு அமைச்சகம்
வைஸ் அட்மிரல் சஞ்சய் வத்சயன், மேற்கு கடற்படை கமாண்டின் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்பு
प्रविष्टि तिथि:
30 MAY 2026 8:04PM by PIB Chennai
வைஸ் அட்மிரல் சஞ்சய் வத்சயன், 2026 மே 30 அன்று மேற்கு கடற்படை கமாண்டின் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றார். இந்த நியமனத்திற்கு முன்பு, அவர் புதுதில்லியில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் துணைத் தலைவராகப் பணியாற்றினார். பொறுப்பேற்ற பிறகு, அவர் மும்பை கடற்படைத் தளத்தில் உள்ள ‘கௌரவ ஸ்தம்பத்தில்’, தேச சேவைக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
புனே, கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாதமியின் முன்னாள் மாணவரான வைஸ் அட்மிரல் சஞ்சய் வத்சயன், 1988 ஜனவரி 1 அன்று இந்தியக் கடற்படையில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பீரங்கி, ஏவுகணை அமைப்புமுறைகளில் நிபுணரான இவர், மூன்று தசாப்தங்களுக்கும் மேலான தனது சிறப்பான கடற்படைப் பணியின் போது, பலதரப்பட்ட பணிகளை வகித்துள்ளார்.
கடலோரக் காவல் கப்பல் சி-05, ஏவுகணைக் கப்பல்களான ஐஎன்எஸ் விபூதி, நஷாக், கார்வெட் ஐஎன்எஸ் குதார், ஐஎன்எஸ் சஹ்யாத்ரி உள்ளிட்ட பல்வேறு முன்னணிப் போர்க்கப்பல்களில் இவர் பணியாற்றியுள்ளார். வெலிங்டனில் உள்ள பாதுகாப்புப் படைப் பணியாளர் கல்லூரி, கோவாவில் உள்ள கடற்படைப் போர்க் கல்லூரி, புதுதில்லியில் உள்ள புகழ்பெற்ற தேசியப் பாதுகாப்புக் கல்லூரி ஆகியவற்றில் பட்டம் பெற்ற இவர், முக்கிய உத்திசார், கொள்கை சார்ந்த பணியாளர் பொறுப்புகளிலும் சிறந்து விளங்கியுள்ளார்.
மேற்கு கடற்படை கமாண்டின் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, இவர், இந்தியக் கடற்படையின் 47-வது கடற்படைத் துணைத் தளபதியாக இருந்தார். பரம் விசிஷ்ட சேவா பதக்கம், அதி விசிஷ்ட சேவா பதக்கம், நாவ் சேனா பதக்கம் ஆகியவற்றை இவர் பெற்றிருக்கிறார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267084®=3&lang=1
***
SS/BR/RJ
(रिलीज़ आईडी: 2272092)
आगंतुक पटल : 21