பாதுகாப்பு அமைச்சகம்
கப்பலில் இருந்து வெடிக்காத ஏவுகணை குண்டுகளை இந்திய கடற்படை பாதுகாப்பாக மீட்டது
प्रविष्टि तिथि:
11 JUN 2026 7:20PM by PIB Chennai
கொச்சி கடற்கரை அருகே, கச்சா எண்ணெய் ஏற்றி வந்த 'எம்டி ஒலிம்பிக் லைஃப்' என்ற கப்பலில் இருந்த வெடிக்காத ஏவுகணைகளில் பொருத்தப்பட்டிருந்த குண்டுகளை, இந்தியக் கடற்படை மிகவும் பாதுகாப்பாக மீட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கொச்சி நோக்கி வந்த இந்த கப்பல், கடந்த மே 26-ம் தேதி ஓமன் கடற்கரை அருகே சென்றபோது அதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கப்பலின் எரிபொருள் தொட்டிக்குள் ஏவுகணையின் ஒரு பகுதி ஊடுருவியுள்ளது தெரியவந்தது.
தகவல் அறிந்த கொச்சி தெற்கு கடற்படை கட்டளை மையம், உடனடியாக வெடிபொருள் செயலிழக்கச் செய்யும் சிறப்பு நிபுணர்கள் குழுவை அனுப்பியது. எரிபொருள் தொட்டிக்குள் வெடிபொருள் இருந்ததால், பெரும் ஆபத்து நிறைந்த இந்தச் சூழலை மிகவும் கவனமாகவும், திட்டமிட்ட முறையிலும் கடற்படையினர் கையாண்டனர். பலகட்ட பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு, அந்த வெடிபொருளைக் கடற்படையினர் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
எந்த நாட்டுக் கப்பலாக இருந்தாலும், கடல்சார் பாதுகாப்பிற்காக இந்தியக் கடற்படை காட்டும் தயார்நிலை மற்றும் அதன் தொழில்நுட்பத் திறனை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271809®=3&lang=1
***
TV/VK/RJ
(रिलीज़ आईडी: 2272061)
आगंतुक पटल : 6