சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
நாட்டில் 11 கோடிக்கும் அதிகமான குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை, மாற்றியமைத்த மத்திய அரசின் 12 ஆண்டு கால செயல்பாடுகள்
प्रविष्टि तिथि:
11 JUN 2026 4:08PM by PIB Chennai
மக்களுக்கான அடிப்படை நலத்திட்ட உதவிகளை வழபகுவது முதல் முழுமையான அதிகாரமளித்தல் நிலையை அடைவது வரை, அவசியமான மாற்றத்தை முன்னிலைப்படுத்தி, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், தனது 12 ஆண்டுகால சாதனைகள் குறித்த விரிவான ஆய்வறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. வலுவான டிஜிட்டல் நடவடிக்கைகள், உறுதியான சட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகள், இலக்கு சார்ந்த வாழ்வாதார வாய்ப்புகள் ஆகியவற்றின் மூலம், 2014 முதல் நாடு முழுவதிலும் உள்ள மாணவர்கள், மூத்த குடிமக்கள், திருநங்கையர், விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த 11 கோடிக்கும் அதிக எண்ணிக்கையிலான மக்களின் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடுக்கு டிஜிட்டல் கட்டமைப்பு அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கும் முறையை முழுமையாக மாற்றியமைத்துள்ளது. 2021-22-ம் நிதியாண்டு முதல் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் மூலம் 'நேரடிப் பணப் பரிமாற்ற' முறையை முழுமையாகச் செயல்படுத்தியதன் மூலம், முறைகேடுகள், நிர்வாக ரீதியான கால தாமதங்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன.
இதுவரை, ஷெட்யூல்டு பிரிவைச் சேர்ந்த மக்களுக்கான முன்னோடித் திட்டமான பள்ளிப் படிப்புக்குப் பிந்தைய கல்வி உதவித்தொகைத் திட்டம் மூலம் 6.12 கோடிக்கும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் ரூ 46,581.54 கோடி மதிப்பிலான நிதியுதவியைப் பெற்றுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271623®=3&lang=1
***
TV/SV/SE
(रिलीज़ आईडी: 2271799)
आगंतुक पटल : 21