தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஏழைகளின் முன்னேற்றம் என்ற 'அந்த்யோதயா' கொள்கையின் அடிப்படையில், தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், தொழிலாளர் நலனை வலுப்படுத்துகின்றன: மத்திய அமைச்சர் செல்வி கரந்த்லாஜே

प्रविष्टि तिथि: 11 JUN 2026 1:34PM by PIB Chennai

தொழிலாளர் சட்ட விதிமுறைகளில் உள்ள இணக்க நடைமுறைகளை  எளிதாக்குதல், தொழிலாளர் நலனை வலுப்படுத்துதல், நவீன, வெளிப்படையான தொழிலாளர் சூழலமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நாட்டில் உள்ள 29 மத்திய தொழிலாளர் சட்டங்களை, நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளாக ஒருங்கிணைத்து, ஏழைகளின் முன்னேற்றம் என்ற 'அந்த்யோதயா' கொள்கையின் அடிப்படையில், இந்தியா விரிவான தொழிலாளர் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் செல்வி ஷோபா கரந்த்லாஜே தெரிவித்தார்.

மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்த்லாஜே தலைமையிலான இந்தியப் பிரதிநிதிகள் குழு, சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்ற 114-வது சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றுள்ளது.

இந்த மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர், இதனை ஏற்பாடு செய்ததற்காக, சர்வதேச தொழிலாளர் அமைப்பிற்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன், விரைவான மாற்றம் கண்டு வரும் உலகளாவிய சூழலில், சமூக நீதிகண்ணியமான வேலைவாய்ப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதில்சர்வதேச தொழிலாளர் அமைப்பின் செயல்பாடுகளுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.

மேலும், இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறன் 2014-ல் 34 சதவீதமாக இருந்த நிலையில், 2025-ல் 56 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 2017-2025 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6 சதவீதத்திலிருந்து 3.1-சதவீதமாகக் குறைந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். அதேவேளையில், பணியிடங்களில், பெண்களின் பங்கேற்பு 22-சதவீதத்திலிருந்து 38.8 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271573&reg=3&lang=1

***

SS/SV/KR


(रिलीज़ आईडी: 2271657) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada , Malayalam