உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உணவு பதப்படுத்துதல் துறையின் முழுமையான வளர்ச்சிக்கான வலுவான செயல் திட்டத்திற்கான அழைப்புடன் தெற்காசிய கொள்கை தலைமைத்துவத்திற்கான மேம்பட்ட ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி குறித்த உரையாடல் நிறைவடைந்தது

प्रविष्टि तिथि: 10 JUN 2026 7:50PM by PIB Chennai

மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சகம், உலக வங்கி குழுமம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த, இரண்டு நாள் மண்டல அளவிலான உயர்நிலைக் கொள்கை கலந்துரையாடல் நிகழ்ச்சி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஜூன் 10, 2026 அன்று நிறைவடைந்தது.

தெற்காசியாவில் வேலைவாய்ப்பு உருவாக்கம், நீடித்த வளர்ச்சிக்காக, உணவு பதப்படுத்துதல் தொழிலை மேம்படுத்துதல் என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்வில், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறைத் தலைவர்கள், சர்வதேச அமைப்புகள், கூட்டு நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், தெற்காசிய நாடுகளின் பிரதிநிதிகள் என 200 பேர் பங்கேற்றனர். இந்தப் பகுதியில் உறுதியான, அனைவரையும் உள்ளடக்கிய, நீடித்த உணவு பதப்படுத்துதலுக்கான  கட்டமைப்புக்களை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர். இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் உரையாற்றிய மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை அமைச்சர் திரு. சிராக் பஸ்வான், உலகளவில், உணவு பதப்படுத்துதல் தொழிலின் மையமாக இந்தியாவின் வளர்ந்து வரும் பங்களிப்பை எடுத்துரைத்தார். மேலும், தெற்காசியாவின் உணவு சார்ந்த பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிக்கும் வகையில்மதிப்பு கூட்டுதல், தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரித்தல், மண்டல அளவிலான ஒத்துழைப்பு ஆகியவற்றின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

நிறைவு விழாவில் உரையாற்றிய மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு. அவினாஷ் ஜோஷி, உணவு பதப்படுத்துதல் தொழில், பொருளாதார வாய்ப்பாக மட்டுமின்றி, தெற்காசியாவில் உள்ள நாடுகளுக்கு தேசிய மற்றும் மண்டல அளவிலான அவசியம் என்பதை வலியுறுத்தினார். இந்தியாவின் முக்கியத் திட்டங்கள், நீண்டகால வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றின் மூலம், நாட்டின் அர்ப்பணிப்புடன் கூடிய நடவடிக்கைகளை அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271308&reg=3&lang=1

***

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2271440) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी