கலாசாரத்துறை அமைச்சகம்
2024, 2025-ம் ஆண்டுகளுக்கான சங்கீத நாடக அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன
प्रविष्टि तिथि:
10 JUN 2026 9:09PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள இசை, நடனம், நாடகத்திற்கான தேசிய அகாடமியான சங்கீத நாடக அகாடமியின் பொதுக்குழு கூட்டம், 2026 மார்ச் 22 முதல் 26 வரை புது தில்லியில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், கலைத் துறையைச் சேர்ந்த ஏழு (7) சிறந்த ஆளுமைகளை ஒருமனதாக அகாடமி ரத்னா விருதிற்காக தேர்ந்தெடுத்தது.
இந்த அமைப்பின் ஃபெல்லோஷிப் விருது, மிகவும் மதிப்புமிக்க, அரிதான கௌரவமாகும். இந்த விருது, 40 நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
மேலும், 2024,2025-ம் ஆண்டுகளுக்கான சங்கீத நாடக அகாடமி விருதுகளுக்கு, இசை, நடனம், நாடகம், பாரம்பரிய / நாட்டுப்புற / பழங்குடியின கலைகள் (இசை, நடனம், நாடகம், பொம்மலாட்டம் போன்றவை), நிகழ்த்து கலைகளில் ஒட்டுமொத்த பங்களிப்பு / ஆய்வுப் பணி போன்ற துறைகளைச் சேர்ந்த 108 கலைஞர்களையும் பொதுக்குழு தேர்ந்தெடுத்தது.
தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த விருதாளர்கள், ஒட்டுமொத்த நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் இந்த விருதிற்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, இந்தச் சிறந்த கலைஞர்கள் இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற மற்றும் பழங்குடியின கலைகள், பொம்மலாட்டம், அது சார்ந்த நாடகக் கலை வடிவங்கள் என நிகழ்த்து கலைகளின் முழுப் பரிமாணங்களையும் கொண்டுள்ளனர்.
அகாடமியின் பொதுக்குழு, 2024, 2025-ம் ஆண்டுகளுக்கான சங்கீத நாடக அகாடமியின் 'உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கான் யுவ புரஸ்கார்' விருதுக்கு 106 இளம் கலைஞர்களையும் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த விருதுகள் சங்கீத நாடக அகாடமியின் தலைவரால், ஒரு சிறப்பு விழாவில் வழங்கப்படும்.
அகாடமி விருதுகள் 1952-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த கௌரவம் மிக உயர்ந்த தரம், சாதனையின் அடையாளமாகத் திகழ்வதுடன், தனிநபர்களின் தொடர்ச்சியான பணி மற்றும் பங்களிப்பையும் அங்கீகரிக்கின்றன. இந்த விருதுடன் ரூ. 3,00,000/- (ரூபாய் மூன்று லட்சம் மட்டும்) மதிப்பிலான பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது. அதேவேளையில், அகாடமி விருதுடன் ரூ. 1,00,000/- (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) ரொக்கப் பரிசும், அதனுடன் தாமிரப் பத்திரம் மற்றும் அங்கவஸ்திரமும் வழங்கப்படுகின்றன.
உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கான் யுவ புரஸ்கார் விருதுடன் ரூ. 25,000/- (ரூபாய் இருபத்தைந்தாயிரம் மட்டும்) ரொக்கப் பரிசும், அதனுடன் தாமிரப் பத்திரம் மற்றும் அங்கவஸ்திரமும் வழங்கப்படுகின்றன.
சங்கீத நாடக அகாடமியின் அகாடமி ரத்னா உள்ளிட்ட பல்வேறு விருதுகள், சிறப்பு விருது வழங்கும் விழாவில், குடியரசுத் தலைவரால் வழங்கப்படும்.
***
(Release ID: 2271371)
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2271433)
आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English