பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய கடற்படைக்காக மேம்பட்ட திறன்மிக்க உலகளாவிய நேவிகேஷன் செயற்கைக்கோள் அமைப்பு ஜாமர்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

प्रविष्टि तिथि: 10 JUN 2026 3:08PM by PIB Chennai

இந்திய கடற்படைக்காக 20 மேம்பட்ட திறன்மிக்க உலகளாவிய நேவிகேஷன் செயற்கைக் கோள் அமைப்பு ஜாமர்களை ரூ.449 கோடி செலவில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் பெங்களூருவைச் சேர்ந்த அக்கார்டு சாஃப்ட்வேர் & சிஸ்டம் தனியார் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதில், குறைந்தபட்சம் 75 சதவீதம் உள்நாட்டு தயாரிப்புப் பொருட்களைக் கொண்டதாக இருக்கும். இதற்கான ஒப்பந்தம் புதுதில்லியில் 2026 ஜூன் 10 அன்று பாதுகாப்புத்துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் கையெழுத்தானது

எதிர் நாட்டின் செயற்கைக் கோள் சமிஞ்ஞை பெறுதல், கண்காணிக்கும் செயல்திறனைக் குறைத்தல், சமிஞ்ஞைகளை ஏமாற்றுதல் அல்லது திசை திருப்புதல் ஆகியவை இந்த கொள்முதல் செய்யப்படும் அமைப்பின் திறன்களில் அடங்கும். பன்முக அச்சுறுத்தல்கள் நிறைந்த சூழலில், இந்திய கடற்படை கப்பல்கள் பாதுகாப்பாக செயல்படுவதற்கு இது வழிவகுக்கும்.

இந்த ஒப்பந்தம் தற்சார்பு இந்தியா, மேக் இன் இந்தியா ஆகிய அரசின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதோடு நாட்டின் கடல்சார் பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்துகிறது. பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதற்கும் மேம்பட்ட ராணுவத் தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே உருவாக்குவதற்குமான முயற்சிகளில் இது முக்கிய அம்சமாக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271094&reg=3&lang=1

***

TV/IR/KPG/RJ      


(रिलीज़ आईडी: 2271383) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR