குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

பிரபல இயக்குநர் பாரதிராஜா மறைவிற்கு குடியரசு துணைத்தலைவர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 10 JUN 2026 1:41PM by PIB Chennai

பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மறைவிற்கு குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்த் திரையுலகில் புதுப் பாதையை உருவாக்கிய, இயக்குநர் இமயம்  பாரதிராஜாவின்  மறைவுச் செய்தி மிகுந்த வேதனையளிப்பதாக கூறியுள்ளார்.

கிராமிய வாழ்வையும் மனித உணர்வுகளையும் இயல்பாகவும் உயிரோட்டமாகவும் திரையில் கொண்டு வந்த முன்னோடி படைப்பாளியான அவர், தனது தனித்துவமான கதை சொல்லல், மறக்க  முடியா, எண்ணற்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் அழியாத முத்திரையைப் பதித்தவர் என்று தெரிவித்துள்ளார். பல தலைமுறை கலைஞர்களுக்கும் திரைப்பட இயக்குநர்களுக்கும் அவர் ஒரு பெரும் ஊக்கமாக விளங்கினார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   

அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும், அவரது எண்ணற்ற ரசிகர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் குடியரசு துணைத்தலைவர் கூறியுள்ளார்.

***

(Release ID: 2271049)

SS/IR/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2271206) வருகையாளர் எண்ணிக்கை : 61
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati , Telugu , Kannada , Malayalam