ஜல்சக்தி அமைச்சகம்
ஜல் ஜீவன் திட்டம் தொடர்பாக சிக்கிம் மாநிலத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
प्रविष्टि तिथि:
09 JUN 2026 7:00PM by PIB Chennai
ஜல் ஜீவன் இயக்கம் 2.0-ன் கீழ், கிராமப்புறங்களில் குடிநீர் விநியோக உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ஜல் சக்தி அமைச்சகம், சிக்கிம் மாநிலத்துடன் சீர்திருத்தம் சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று (09.06.2026) கையெழுத்திட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், ஜல் ஜீவன் இயக்கம் 2.0-ன் நோக்கங்களுடன் இணைந்த, கிராம பஞ்சாயத்து தலைமையிலான, சேவை அடிப்படையிலான, சமூகம் சார்ந்த கிராமப்புற நீர் நிர்வாக மாதிரியை கட்டாயமாக்குகிறது. ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் போதுமான அளவிலும், பரிந்துரைக்கப்பட்ட தரத்திலும், சீரான இடைவெளியில் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு சி.ஆர். பாட்டீல், சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமாங் ஆகியோர் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு சி.ஆர். பாட்டீல், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் தொடங்கப்பட்ட ஜல் ஜீவன் இயக்கம், நாடு முழுவதும் கிராமப்புறங்களில் குடிநீர் விநியோகத்தைச் சிறப்பாக மாற்றியமைத்துள்ளதுடன், பெண்கள் தண்ணீர் எடுப்பதில் உள்ள சிரமத்தைக் குறைத்துள்ளது என்றார். ஜல் ஜீவன் இயக்கம் 2.0-ன் கீழ், தற்போது இந்த இயக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்புகளைப் பராமரித்தல், குழாய் இணைப்புகளின் செயல்பாடு, நீரின் தரம், நீர் ஆதாரத்தின் நிலைத்தன்மை ஆகியவை முக்கிய முன்னுரிமைகளாகக் கவனம் செலுத்தப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமாங் தமது உரையில், ஜல் ஜீவன் திட்டத்தில் தொடர்ச்சியான ஆதரவை வழங்கி வரும் ஜல் சக்தி அமைச்சகத்திற்கு நன்றி தெரிவித்தார். புவியியல் ரீதியாக சவாலாகவும், பேரிடர் பாதிப்புக்குள்ளாகக்கூடியதுமான சிக்கிம் போன்ற இமயமலை மாநிலத்தில் இந்த இயக்கம் ஏற்படுத்தியுள்ள நல்ல மாற்றத்தை அவர் எடுத்துரைத்தார். ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் பாதுகாப்பான குடிநீரை உறுதி செய்வதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையைக் குறிப்பிட்ட அவர், இந்தத் திட்டம் சிக்கிமில் உள்ள கிராமப்புற சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக மேம்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270852®=3&lang=1
(Release ID: 2270852)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2270919)
आगंतुक पटल : 18