சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்பான தாய்மைத் திட்டத்தின் 10 ஆண்டு கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் திரு ஜே.பி. நட்டா தொடங்கி வைத்தார்

प्रविष्टि तिथि: 09 JUN 2026 6:23PM by PIB Chennai

மத்திய சுகாதார அமைச்சகத்தின் திட்டமான பிரதமரின் சுரக்ஷித் மாத்ரித்வ அபியான் (பிரதமரின் பாதுகாப்பான தாய்மைத் திட்டம்), 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இத்திட்டம் இந்தியா முழுவதும் பாதுகாப்பான தாய்மையை உறுதி செய்வதில் அர்ப்பணிப்புமிக்க சேவையாற்றி வருகிறது. இத்திட்டத்தின் நாடு தழுவிய பத்து ஆண்டு கொண்டாட்டங்களை மதிய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜே.பி. நட்டா புதுதில்லியில் இன்று (09.06.2026) தொடங்கி வைத்தார்.

 

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு ஜே.பி. நட்டா, இந்த மைல்கல் நிகழ்வு ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமையையும் மனநிறைவையும் அளிக்கும் தருணம் என்று கூறினார். கடந்த பத்தாண்டுகளில் இத்திட்டத்தின் வெற்றிகரமான செயலாக்கம், நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாதுகாப்பான தாய்மையையும் ஆரோக்கியமான பச்சிளம் குழந்தைகளையும் உறுதிசெய்ய பாடுபட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

 

கடந்த பத்து ஆண்டுகளில், இத்திட்டம் நாடு முழுவதும் தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோரின் சுகாதார சேவைகளை வலுப்படுத்தியது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான இந்தியாவிற்கு ஒரு வலுவான அடித்தளத்தையும் அமைத்துள்ளது என்று திரு நட்டா குறிப்பிட்டார்.

 

இந்தத் திட்டத்தின் செயல்பாட்டை எடுத்துரைத்த திரு. நட்டா, ஒவ்வொரு மாதமும் 9-ம் தேதி சிறப்பு மருத்துவர்கள் மூலம் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச, விரிவான, தரமான மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பு சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.

 

தாய்-சேய் நலனில் இந்தியா அடைந்துள்ள சாதனைகளை எடுத்துரைத்த திரு. நட்டா, தாய் - சேய் இறப்பு விகிதங்கள் உலக சராசரியை விட இந்தியாவில் குறைந்துள்ளது என்று கூறினார். சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் முடிவுகளில் பிரதிபலிக்கும் முன்னேற்றங்களையும் திரு நட்டா சுட்டிக் காட்டினார். மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்கள் 90.6 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், அதே நேரத்தில் மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பைப் பெறும் தாய்மார்களின் விகிதம் 95.9 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தச் சாதனைகள், வலுப்படுத்தப்பட்ட சுகாதார அமைப்புகள், மேம்படுத்தப்பட்ட சேவை வழங்கல், விழிப்புணர்வு அதிகரிப்பு ஆகியவற்றின் பிரதிபலிப்பாகும் என்று அவர் கூறினார்.

 

இந்நிகழ்வின்போது, இத்திட்டத்தின் பத்தாண்டு மைல்கல்லைக் குறிக்கும் வகையில், திரு நட்டா ₹75 சிறப்பு நாணயத்தையும், ₹5 சிறப்பு தபால்தலையையும் வெளியிட்டார்.

 

இந்நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல், இந்தியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி டாக்டர் இவான் ஜே.எஃப். ஹுடின், உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270828&reg=3&lang=1

(Release ID: 2270828)

****

TV/PLM/SH

 


(रिलीज़ आईडी: 2270889) आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Urdu , हिन्दी , Punjabi , Telugu