சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிப்பை வலுப்படுத்த, இயந்திரமயமாக்கப்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்
இடுகை இடப்பட்ட நாள்:
09 JUN 2026 5:45PM by PIB Chennai
இயந்திரமயமாக்கப்பட்ட, தானியங்கி அமைப்புகளை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தின் ஒரு பகுதியாக, தேசிய நெடுஞ்சாலைகளில் பராமரிப்பு நடைமுறைகளை வலுப்படுத்தும் நோக்கில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், தொழில்நுட்பம் சார்ந்த முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் உள்ள வடிகால் அமைப்புகளின் இயந்திரமயமாக்கப்பட்ட பராமரிப்பு, இயந்திரமயமாக்கப்பட்ட சாலைப் பராமரிப்பு உபகரணங்களைப் பயன்படுத்துதல் ஆகியவை தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பங்களைப் பின்பற்றுதல், பராமரிப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்தல், விதிகளைக் கடுமையாக அமல்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் தேசிய நெடுஞ்சாலைப் பராமரிப்பின் செயல்திறனையும் தரத்தையும் மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். இந்த நடவடிக்கைகள் தரத்தை மேம்படுத்தி, நிலைத்தன்மையை வலுப்படுத்தி, தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களின் பயண அனுபவத்தை மேம்படுத்தும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270795®=3&lang=1
(Release ID: 2270795)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2270886)
வருகையாளர் எண்ணிக்கை : 46