வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புவிசார் குறியீடு பெற்ற தேஜ்பூர் லிச்சி, அசாமிலிருந்து துபாய்க்கு முதல் முறையாக ஏற்றுமதி செய்யப்பட்டது

प्रविष्टि तिथि: 09 JUN 2026 11:59AM by PIB Chennai

புவிசார் குறியீடு பெற்ற தேஜ்பூர் லிச்சி, அசாமிலிருந்து துபாய்க்கு முதல் முறையாக 2026 ஜூன்  7 அன்று ஏற்றுமதி செய்யப்பட்டது. மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சகத்தின் வேளாண், பதனப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் இந்நடவடிக்கை வடகிழக்குப் பிராந்தியத்திலிருந்து வேளாண் பொருட்களுக்கான சர்வதேச சந்தை அணுகலை விரிவுபடுத்துவதில் முக்கிய மைல்கல்லாகும்.

ஒரு மெட்ரிக் டன் எடையிலான புவிசார் குறியீடு பெற்ற இந்த தேஜ்பூர் லிச்சி, அசாமின் புகழ்பெற்ற தோட்டக்கலை உற்பத்தியில் ஒன்றாகும்.

இப்பழம் அதன் சிறப்புமிக்க இனிப்புச்சுவை, சிவப்பு நிறம், தனித்துவமிக்க மணம் ஆகியவற்றுக்காக அறியப்படுகிறது.

துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள இந்த தேஜ்பூர் லிச்சி, எதிர்காலத்தில் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என்றும் அசாமின் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களுக்கு  உலகளாவிய வரவேற்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270578&reg=3&lang=1

***

SS/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2270868) आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Assamese , Bengali-TR