பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐதராபாதில் உள்ள விமானப்படை அகாடமியில் ஜூன் 13 அன்று நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் பாதுகாப்பு அமைச்சர் பங்கேற்க உள்ளார்

प्रविष्टि तिथि: 09 JUN 2026 11:42AM by PIB Chennai

ஐதராபாத் துண்டிக்கலில் உள்ள விமானப்படை அகாடமியில் 2026  ஜூன் 13 அன்று ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு நடைபெறவுள்ளது. இந்திய விமானப்படையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வெற்றிகரமாக பயிற்சி முடித்த வீரர்கள், இந்த அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர். இதை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பார்வையிட உள்ளார்.

இந்நிகழ்ச்சியில், ஆய்வு செய்யும் அதிகாரியாக உள்ள பாதுகாப்பு அமைச்சர், பயிற்சி முடித்த வீரர்களுக்கு குடியரசுத்தலைவரின் ஆணைகளை  வழங்குகிறார். இந்திய விமானப்படையின் பயிற்சி மாணவர்கள், இந்தியக் கடற்படை, இந்திய கடலோரக் காவல் படை, வியட்நாம் சோஷலிச குடியரசு ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள், பயிற்சியாளர்களுக்கு, பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கான விங்ஸ்,  பிரவெட்ஸ் ஆகிய சின்னங்கள் வழங்கப்பட உள்ளது. புனேயில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் தேர்ச்சிப் பெற்று குறிப்பிட்ட பயிற்சிக்காக விமானப்படை அகாடமியில் இணைந்த முதலாவது பெண் பயிற்சியாளர்களின் அதிகாரப்பூர்வ நியமனமும் இந்தப் பட்டமளிப்பு விழாவில் அடங்கும்.

விமானத்தை இயக்குதல், வழிசெலுத்துதல், தரைப்பணி ஆகிய பிரிவுகளில் முதலிடம் பிடித்த விமானப்படை பயிற்சி மாணவர்களுக்கு, குடியரசுத்தலைவர் பதக்கத்தை பாதுகாப்பு அமைச்சர் வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில், ஆகாஷ் கங்கா, ஏர் வாரியர் டிரில்குழு ஆகியவற்றின் சாசக நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. அத்துடன் விமானப்படைத் தலைமை தளபதி  மார்ஷல் ஏ பி சிங் தலைமையிலான  அணிவகுப்பும் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சி இந்திய விமானப்படையின் சமூக ஊடகங்கள், டிடிநேஷனல் ஆகியவற்றில் 2026 ஜூன் 13 அன்று காலை 7 மணி முதல் ஒளிபரப்பாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270574&reg=3&lang=1

***

SS/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2270864) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati