வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அரசு மின் சந்தைத் தளம் வெளிப்படையான கொள்முதல் நடைமுறையை வலுப்படுத்துகிறது

प्रविष्टि तिथि: 09 JUN 2026 1:48PM by PIB Chennai

கடந்த சில ஆண்டுகளாக, நாட்டின் நிர்வாகச் சூழல் அமைப்பானது, தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது. இது வெளிப்படையான, மக்களை மையமாகக் கொண்ட சேவை வழங்கலை நோக்கிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக 2016 ஆகஸ்ட் 9 அன்று தொடங்கப்பட்டதிலிருந்து, அரசு மின் சந்தைத் தளமானது, வெளிப்படையான பொதுக் கொள்முதலைச் சாத்தியமாக்குகிறது. இது வாங்குவோர், விற்பனையாளர்கள் என இருதரப்பினரின் பரந்த பங்கேற்பை எளிதாக்குவதன் மூலம், மேம்பட்ட சேவை வழங்கலை உருவாக்கி வருகிறது.

 

ஒரு முக்கிய நிர்வாகச் சீர்திருத்தமாகக் உருவாக்கப்பட்ட அரசு மின் சந்தைத் தளம், கொள்முதல் நடைமுறைகளை டிஜிட்டல், தரவு சார்ந்த அமைப்பாக மாற்றியுள்ளது. மனிதத் தலையீட்டைக் குறைத்து, வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தி, அரசு கொள்முதல் வாய்ப்புகளை எளிதாக்குவதன் மூலம், இந்தத் தளம், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள நிறுவனங்களின் பரந்த பங்கேற்பை சாத்தியமாக்கியுள்ளது. இது டிஜிட்டல் கொள்முதல் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகத் தொடர்ந்து விளங்குகிறது.

 

அதில் குறு, சிறு நிறுவனங்களின் பங்கேற்பு அதிகரித்துள்ளது. பதிவுசெய்யப்பட்ட குறு, சிறு நிறுவனங்களின் எண்ணிக்கை 2016-17-ல் 2,396 ஆக இருந்துது. தற்போது அது 11.9 லட்சத்தைத் தாண்டியுள்ளது. குறு, சிறு நிறுவனங்களிடமிருந்து செய்யப்படும் கொள்முதல் ரூ.69 கோடியிலிருந்து ரூ.8.69 லட்சம் கோடிக்கும் அதிகமாக வளர்ந்துள்ளது. அதே காலகட்டத்தில் கொள்முதல் ஆணைகளின் (ஆர்டர்) எண்ணிக்கை 2,994-லிருந்து 2.17 கோடிக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

 

அரசு மின் சந்தை தளத்தில் பெண்களின் தலைமையிலான குறு, சிறு நிறுவனங்களின் எண்ணிக்கை 2016-17-ல் 268 ஆக இருந்தது. தற்போது அது 2.16 லட்சத்தைத் தாண்டியுள்ளது.  அவற்றின் கொள்முதல் மதிப்பு ரூ.8 கோடியிலிருந்து ரூ.93,327 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. புத்தொழில் நிறுவனங்களின் பங்கேற்பு 88-லிருந்து 40,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களாக வளர்ந்துள்ளது. அவற்றின் கொள்முதல் மதிப்பு ரூ.2 கோடியிலிருந்து ரூ.61,400 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதேபோல், பதிவுசெய்யப்பட்ட பட்டியலின பிரவினர்/பழங்குடியின குறு, சிறு நிறுவனங்களின் எண்ணிக்கை 38-லிருந்து 66,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அவற்றின் கொள்முதல் மதிப்பு ரூ.21,800 கோடியைத் தாண்டியுள்ளது. இந்த முன்னேற்றங்கள், இத்தளத்தின் மூலம் எளிதாக்கப்பட்ட பொதுக் கொள்முதலில் விரிவடைந்து வரும் பங்கேற்பைப் பிரதிபலிக்கின்றன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270641&reg=3&lang=1

 

***

(Release ID : 2270641)

SS/PLM/SH


(रिलीज़ आईडी: 2270858) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Punjabi