வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு, நீர்வாழ் உயிரின வளர்ப்புப் பொருட்கள், தேன், முட்டைகள், விலங்கு குடல் உறைகளை ஏற்றுமதி செய்வதற்கான சந்தை வாய்ப்பை இந்தியா தக்க வைத்துக் கொண்டுள்ளது

प्रविष्टि तिथि: 08 JUN 2026 5:54PM by PIB Chennai

இந்தியாவின் விவசாயம், கடல்சார் ஏற்றுமதியில், ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, திருத்தியமைக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறை கட்டமைப்பின் கீழ், செப்டம்பர் 2026-க்குப் பின்பும், நீர்வாழ் உயிரின வளர்ப்புப் பொருட்கள், முட்டைகள், தேன், விலங்கு குடல் உறைகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஏதுவாக, அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது. நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் தொடர்பான அச்சம் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஐரோப்பிய ஆணையத்தின் அமலாக்க ஒழுங்குமுறை (2026/1189) அறிக்கை மூலம், ஒழுங்குமுறை இயு 2021/405-ல் அதற்கான திருத்தத்தை, ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இந்தத் திருத்தியமைக்கப்பட்ட ஒழுங்குமுறை நெறிமுறைகள், செப்டம்பர் 2026 முதல் நடைமுறைக்கு வரும். இது விலங்கு சார்ந்த குறிப்பிட்ட பொருட்களை, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு, ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கான கூடுதல் நிபந்தனைகளை வகுத்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட்டிருப்பது, 2026 செப்டம்பர் மதத்திற்குப் பின்பும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் சந்தைக்கு இப்பொருட்களின் ஏற்றுமதி தொடர்வதை உறுதி செய்கிறது. இது மீன்வளத் துறைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஏனெனில், இந்தியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன், மீன்வளப் பொருட்களின் மதிப்பு தற்போது 1.59 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270317&reg=3&lang=1

(Release ID: 2270317)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2270443) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी