பிரதமர் அலுவலகம்
குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்
प्रविष्टि तिथि:
04 MAY 2026 8:21AM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கூட்டு கனவை வலுப்படுத்த குடியரசு துணைத்தலைவர் எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகப் பிரதமர் குறிப்பிட்டார். நாடாளுமன்ற நடவடிக்கைகளின் ஆக்கப்பூர்வமான செயல்திறனை மேம்படுத்துவதற்கான அவரது தொடர்ச்சியான முயற்சிகள், ஜனநாயக மாண்புகளின் மீதான அவரது ஆழ்ந்த அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன என்று திரு மோடி எடுத்துரைத்தார்.
ஏழை மற்றும் விளிம்புநிலையில் உள்ள மக்கள் மீதான அக்கறையுடன், அனைத்துத் துறை மேம்பாட்டிற்காக குடியரசுத் துணைத்தலைவர் கொண்டுள்ள அசைக்க முடியாத பேரார்வமும் அதே அளவு ஊக்கமளிப்பதாக பிரதமர் மேலும் கூறினார். அவரது பொது வாழ்க்கை அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் தெளிவான குறிக்கோளால் தொடர்ந்து வழிநடத்தப்படுகிறது என்பதை வலியுறுத்திய திரு மோடி, அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும், தேச சேவையில் நீண்ட காலம் பணியாற்ற பிரார்த்தனை செய்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நமது கூட்டு கனவை வலுப்படுத்த அவர் எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். நமது நாடாளுமன்ற நடவடிக்கைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான அவரது தொடர் முயற்சிகள், ஜனநாயக மாண்புகளின் மீதான அவரது ஆழ்ந்த அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன. ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்கள் மீதான அக்கறையுடன், அனைத்துத் துறை மேம்பாட்டிற்காக அவர் கொண்டுள்ள அசைக்க முடியாத பேரார்வமும் அதே அளவு ஊக்கமளிக்கிறது. அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் தெளிவான குறிக்கோளால் அவரது பொது வாழ்க்கை, தொடர்ந்து வழிநடத்தப்படுகிறது. அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும், தேச சேவையில் நீண்ட காலம் பணியாற்ற நான் பிரார்த்திக்கிறேன்.”
-----
(Release ID: 2257708)
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2270413)
आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam