மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

திருத்தப்பட்ட உடான் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 25 MAR 2026 4:16PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஆதரவுடன், ₹28,840 கோடி மொத்த ஒதுக்கீட்டில், 2026-27-ம் நிதியாண்டு முதல் 2035-36-ம் நிதியாண்டு வரையிலான பத்து ஆண்டு காலத்திற்கு பிராந்திய விமான இணைப்புத் திட்டமான திருத்தப்பட்ட 'உடான்' திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம்  போதிய விமான சேவை கிடைக்காத பகுதிகளுக்கு மேம்படுத்தப்பட்ட பிராந்திய விமான இணைப்பு கிடைக்கும். இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் பொருளாதார வளர்ச்சி, வர்த்தகம், சுற்றுலாவுக்கு ஊக்கம் கிடைக்கும்.

இதன் மூலம் சாதாரண மக்கள் மலிவு விலையில் விமானப் பயணத்தை மேற்கொள்ள முடியும். தொலைதூர மலைப்பாங்கான பிராந்தியங்களில் மேம்படுத்தப்பட்ட அவசரகால மீட்புப் பணிகள் சாத்தியமாகும்.

திருத்தப்பட்ட உடான் திட்டத்தின் கீழ் பிராந்திய விமான இணைப்பை மேம்படுத்தும் நோக்கில், தற்போதுள்ள சேவையற்ற விமான ஓடுபாதைகளிலிருந்து 100 விமான நிலையங்களை அடுத்த எட்டு ஆண்டுகளில் ₹12,159 கோடி மொத்த ஒதுக்கீட்டில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் 2016 அக்டோபரில் தொடங்கப்பட்டது. இதில் இதுவரை

95 விமான நிலையங்கள், ஹெலிபோர்ட்கள், நீர் விமானத் தளங்களில் 663 வழித்தடங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன (28 பிப்ரவரி 2026 நிலவரம்).

3.41 லட்சத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு, இவற்றில் 162.47 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2245096&reg=3&lang=2

***

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2270062) आगंतुक पटल : 32
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Malayalam , Odia , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Bengali-TR , Manipuri , Punjabi , Gujarati , Kannada