பிரதமர் அலுவலகம்
ஐ.நா.வின் மதிப்புமிக்க விருதைப் பெற்ற மேஜர் அபிலாஷா பராக்கிற்குப் பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
07 JUN 2026 2:06PM by PIB Chennai
ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் 2025-ம் ஆண்டிற்கான சிறந்த ராணுவப் பாலின சமத்துவப் பாதுகாவலர் விருது வழங்கப்பட்ட மேஜர் அபிலாஷா பராக்கிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். லெபனானில் உள்ள ஐநா இடைக்கால அமைதிப் படையில் மேஜர் பராக், ஒருங்கிணைப்புக் குழுத் தளபதியாகவும் பாலின சமத்துவ ஒருங்கிணைப்பு அதிகாரியாகவும் பணியாற்றி வருவதைப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கௌரவம், அவரது முன்மாதிரியான சேவைக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் முயற்சிகளுக்கு இந்தியா நீண்ட காலமாக ஆற்றிவரும் பங்களிப்புக்கும் கிடைத்த அங்கீகாரமாகும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
அவரது சாதனை, நாட்டிற்கும் மனிதகுலத்திற்கும் சேவை செய்ய விரும்பும் எண்ணற்ற இளம் இந்தியர்களுக்கும், குறிப்பாக நாட்டின் மகள்களுக்கும் ஒரு உத்வேகமாக விளங்குகிறது என்று பிரதமர் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"ஆண்டின் சிறந்த ஐ.நா. ராணுவப் பாலின சமத்துவப் பாதுகாவலர் விருது வழங்கப்பட்ட மேஜர் அபிலாஷா பராக்கிற்கு வாழ்த்துகள். மேஜர் பராக், லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்கால அமைதிப் படையில் (UNIFIL) ஒருங்கிணைப்புக் குழுத் தளபதியாகவும் பாலின சமத்துவ ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்த கௌரவம், அவரது முன்மாதிரியான சேவைக்கும், ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் முயற்சிகளுக்கு இந்தியா நீண்ட காலமாக ஆற்றிவரும் பங்களிப்பிற்கும் கிடைத்த அங்கீகாரமாகும். அவரது இந்தச் சாதனை, தேசத்திற்கும் மனிதகுலத்திற்கும் சேவை செய்ய விரும்பும் எண்ணற்ற இளம் இந்தியர்களுக்கும், குறிப்பாக நமது மகள்களுக்கும் ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது".
***
(Release ID: 2269987)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2270039)
आगंतुक पटल : 70
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam