மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

₹5659.22 கோடி ஒதுக்கீட்டில் பருத்தி உற்பத்தித்திறனுக்கான இயக்கத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 05 MAY 2026 6:40PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவின் பருத்தித் துறையில் உள்ள தடைகள், சரிந்துவரும் வளர்ச்சி, தரக்குறைபாடு ஆகியவற்றைக் களைவதற்காக, பருத்தி உற்பத்தித்திறன் இயக்கத்திற்கு (2026–27 முதல் 2030–31 வரை) ₹5659.22 கோடியை ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம், இந்திய அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு (பண்ணையிலிருந்து இழை, தொழிற்சாலையிலிருந்து ஆடை, ஆடையிலிருந்து வெளிநாடு வரை) ஏற்ப அமைந்துள்ளது. இத்திட்டம், நோய் எதிர்ப்பு, பூச்சிகளை எதிர்க்கும் திறன் கொண்ட விதைகளை உருவாக்குவது ஆகியவை மூலம் பருத்தி உற்பத்தித்திறனை மேம்படுத்தும் நோக்கம் கொண்டதாகும். மாநில அரசுகள், வேளாண் அறிவியல் மையங்கள், மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் ஆகியவை மூலம் பருத்தி உற்பத்தித் தொழில்நுட்பங்களை பெரிய அளவில் ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்தப்படும்.

இந்தத் திட்டம், வேளாண்மை  அமைச்சகம், ஜவுளி அமைச்சகம் ஆகியவற்றால் இணைந்து செயல்படுத்தப்படும்.

ஹெக்டேருக்கு 440 கிலோவாக உள்ள பஞ்சு உற்பத்தித்திறனை இந்தத் திட்டம், 2031-ம் ஆண்டுக்குள்  755 கிலோவாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் சுமார் 32 லட்சம் விவசாயிகள் பயனடைந்து, தற்சார்பு நிலையை அடைவார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2258111&reg=3&lang=2

***

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2269996) வருகையாளர் எண்ணிக்கை : 47