திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகப் பணியாளர்களின் குழந்தைகளுக்கான பகல்நேரக் காப்பகத்தை மத்திய அமைச்சர் திரு. ஜெயந்த் சௌத்ரி தொடங்கி வைத்தார்.

प्रविष्टि तिथि: 06 JUN 2026 1:49PM by PIB Chennai

அனைவரையும் உள்ளடக்கிய, கனிவான, மக்களை மையமாகக் கொண்ட பணிச்சூழலை உருவாக்குவதற்கான முக்கிய நடவடிக்கையாக, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் தலைமையகமான 'திறன் மேம்பாட்டு மாளிகையில்', பணியாளர்களின் குழந்தைகளுக்காக. ஒரு புதிய பகல்நேரக் காப்பகத்தை, அத்துறைக்கான இணையமைச்சர் திரு. ஜெயந்த் சௌத்ரி தொடங்கி வைத்தார்.

இந்தப் புதிய காப்பகம், 600 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காப்பகம், குழந்தைகளுக்கு கற்றல், விளையாட்டு, ஓய்வு, உடல் வளர்ச்சி ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில், பாதுகாப்பான, அன்பான சூழலை வழங்குகிறது. குழந்தைகள் வசதியாக உறங்குவதற்கும், ஓய்வெடுப்பதற்கும், சுவாரஸ்யமான விளையாட்டுக்களில் பங்கேற்பதற்கும், இதர செயல்பாடுகளுக்கும் ஏற்ற இட வசதிகளுடன் இந்த காப்பகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வயதுக்கு ஏற்ப, கற்றல் வளங்கள், குழந்தைகளுக்கு ஏற்ற அறைகலன்கள், சுகாதாரமான கழிவறைகள், பச்சிளம் குழந்தைகள், சிறார்களுக்கான வசதி, நலனை உறுதி செய்யும் வகையில், பிரத்யேக அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட உணவூட்டும் அறை, பச்சிளம் குழந்தைகளுக்கான பராமரிப்பு அறைகள் போன்ற வசதிகளையும் இந்த காப்பகம்  கொண்டுள்ளது. பயிற்சி பெற்ற பராமரிப்பாளர்கள், உதவியாளர்களைக் கொண்ட இக்காப்பகம், 6 மாதங்கள் முதல் 6 வயது வரையிலான குழந்தைகளின் வளர்ச்சி, பராமரிப்புத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிதாகத் தொடங்கப்பட்ட இந்தக் காப்பகம், உள்கட்டமைப்பு வசதிகளுடன், அக்கறையுடன், குழந்தைப் பருவத்தைக் கொண்டாடுவதற்கும், ஊழியர்கள் தங்களது தொழில்முறை சார்ந்த பணிகளையும், குடும்பப் பொறுப்புகளையும், சமவிகிதத்தில் நிர்வகிக்க உதவிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தரமான குழந்தைப் பராமரிப்பு வசதியை, ஊழியர்களின் பணியிடத்திற்கு அருகில் அமைப்பதன் மூலம், பணிபுரியும் பெற்றோருக்கு ஆதரவளிக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது. மேலும், அனைவரையும் உள்ளடக்கிய, குடும்பத்திற்கு உகந்த, மக்களை மையமாகக் கொண்ட பணிச்சூழலை வளர்ப்பதற்கான அமைச்சகத்தின் உறுதியான நிலைப்பாட்டையும்  இது பிரதிபலிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269728&reg=3&lang=1

(Release ID: 2269728)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2269753) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati , Kannada