வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கார்பன் வெளியேற்ற கட்டண திட்டம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தரநிலைகளை உலக வர்த்தக அமைப்பில் இந்தியா காட்சிப்படுத்தியது

प्रविष्टि तिथि: 05 JUN 2026 6:39PM by PIB Chennai

ஜெனீவாவில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின்  ' வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழல் வார 2026' நிகழ்வில், இந்தியாவின் கார்பன் வெளியேற்ற கட்டணத் திட்டம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தரநிலைகள் குறித்து சிறப்பான முறையில் எடுத்துரைக்கப்பட்டது.

 

இந்த நிகழ்வில், இந்தியா தனது தேசிய பங்களிப்புகளை இலக்கை விட முன்னதாகவே எட்டியுள்ள விதம் குறித்து விளக்கப்பட்டது. குறிப்பாக, 2030-ஆம் ஆண்டிற்கான இலக்கை விட முன்னதாகவே, மார்ச் 2026 நிலவரப்படி இந்தியாவின் புதைபடிமமற்ற எரிசக்தி உற்பத்தி திறன் 53.21 சதவீதத்தை எட்டியுள்ளது. மேலும், இந்தியாவின் கார்பன் சந்தை கட்டமைப்பு, பசுமை ஹைட்ரஜன் இயக்கம் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இரண்டையும் எவ்வாறு சமநிலையில் முன்னெடுக்கலாம் என்பது சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்காட்டப்பட்டது. இத்தகைய முன்னெடுப்புகள் மூலம், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் இந்தியா ஒரு பொறுப்புள்ள நாடாகத் தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269438&reg=3&lang=2

செய்தி அடையாள எண்:2269438

***

 

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2269697) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Malayalam