சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
தில்லியில் 18 நமோ ஆக்சிஜன் பூங்காக்களை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
05 JUN 2026 12:04PM by PIB Chennai
தில்லியின் பல்வேறு பகுதிகளில் 18 நமோ ஆக்சிஜன் பூங்காக்களை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவும் தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தாவும் இன்று (05.06.2026) தொடங்கி வைத்தனர். உலக சுற்றுச்சூழல் தினம் 2026-ஐயொட்டி தாயின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கத்தின் கீழ், தொடர்ச்சியான சுற்றுச்சூழல் முன்முயற்சிகளையும் அவர்கள் தொடங்கி வைத்தனர். தேசிய தலைநகர் பிராந்த்தியத்தின் நகர்ப்புற பசுமையாக்கத்ததை வலுப்படுத்துதல், காற்றின் தரத்தை மேம்படுத்துதல் சமூகத்தின் தலைமையில் சுற்றுச்சூழல் பொறுப்புடமையை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கிய குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக மைதான்கரியில் உள்ள நமோ ஆக்சிஜன் பூங்காவில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங், தில்லிப்பிரதேச சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் துறை அமைச்சர் சர்தார் மஞ்சீந்தர் சிங் சிர்சா, மத்திய மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், பருவநிலை மாற்றம், பல்லுயிர் பெருக்க இழப்பு, பாலைவனமாதலுக்கு வழிவகுக்கும் நிலம் சீரழிதல் ஆகியவை தற்போது மனிதகுலம் சந்திக்கும் 3 முக்கியமான சுற்றுச்சூழல் சவால்களாக இருக்கின்றன என்றார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், சுற்றுச்சூழல் சார்ந்த செயல்பாட்டில் உலகளாவிய தலைவராக இந்தியா உருவாகியுள்ளது என்றும் பல சாதனைகளை படைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பிரதமரின் வீட்டுக் கூரை சூரிய மின்சக்தி திட்ட அமலாக்கத்தின் மூலம் சூரிய மின்சக்தித் திறனை அதிகரிக்கும் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியிருப்பது, சர்வதேச சூரியசக்தி கூட்டணியை நிறுவியிருப்பது, சர்வதேச புலிகள் கூட்டணியை தொடங்கியிருப்பது ராம்சர் சதுப்புநில தளங்களை விரிவுபடுத்தியிருப்பது, பருவநிலை மாற்றம் குறித்த ஐநா கட்டமைப்பு மாநாட்டில் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பே தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பு இலக்குகளை நிறைவேற்றியிருப்பது என்பவை இந்த சாதனைகளில் அடங்கும் என்று அவர் கூறினார்.
நமோ வனங்கள் உருவாக்கம் போன்ற சுற்றுச்சூழல் செயல்பாடுகள் மூலம், நாடு முழுவதும் நகர்ப்புற பசுமையாக்கல் முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார். இந்த அடிப்படையில் தலைநகர் தில்லியில் காற்றின் தரத்தை மேம்படுத்தவும் பல்லுயிர் பெருக்கத்தை விரிவுபடுத்தவும் குடிமக்களுக்கு பொழுதுபோக்குக்கான இடங்களை வழங்கவும் நமோ ஆக்சிஜன் பூங்காக்கள் உருவாக்கப்பட்டு தொடங்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269191®=3&lang=1
***
SS/SMB/KPG/SH
(रिलीज़ आईडी: 2269531)
आगंतुक पटल : 13