தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

வெப்ப அலையின் தாக்கம் அதன் தணிப்பு முறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 04 JUN 2026 12:13PM by PIB Chennai

நகர்ப்புறங்களில்  நிலவும் வெப்ப அலைகளால் ஏற்படும் தாக்கம் குறித்தும் அவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய சுற்றுச் சூழல்  மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த ஆலோசனைக் குழுத் தலைவர்  நீதிபதி  ராமசுப்பிரமணியன் தற்போதைய இயற்கை சூழல் அமைப்புகளுக்கான பாதுகாப்பை மேம்படுத்துவது, நீர் நிலைகளைச் சுற்றி நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்கான ஒழுங்குமுறை நடைமுறைகளை கடுமையாக பின்பற்றுவது நீடித்த நகர்ப்புற வளர்ச்சியை மையமாகக் கொண்ட செயல்பாடுகளை பரிந்துரை செய்ய வேண்டியதன் அவசியத்தை விரிவாக எடுத்துரைத்தார். 

இந்நிகழ்ச்சியில் பேசிய இக்குழு உறுப்பினர் நீதிபதி பித்யுத் ரஞ்சன் சாரங்கி, நகர்ப்புற வளர்ச்சிக்கான திட்டங்களை சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் சமநிலைப் படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இயற்கையைப் பாதுகாப்பதற்கான கூட்டு நடவடிக்கைகள் குறித்தும் அவர் விரிவாக எடுத்துரைத்தார்.

வெப்ப அலைகளின் தாக்கத்தை தணிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலும் அதன் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது என்று அக்குழுவின் பொதுச் செயலாளர் திரு பரத் லால் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268793&reg=3&lang=1

***

SS/SV/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2269038) வருகையாளர் எண்ணிக்கை : 55
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada