பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்புப் படையின் செயல்திறனை வலுப்படுத்த தளபதிகளுக்கான நிதி உச்ச வரம்பை இரு மடங்காக அதிகரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல்
प्रविष्टि तिथि:
04 JUN 2026 1:05PM by PIB Chennai
பாதுகாப்புத் துறையில் மருத்துவம், அது சார்ந்த திட்டங்கள் உட்பட பாதுகாப்பு செயல்களுக்கான திருத்தியமைக்கப்பட்ட நிதி அதிகார பகிர்வு குறித்த அறிவிக்கையை அத்துறைக்கான அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் புதுதில்லியில் இன்று (04.06.2026) வெளியிட்டார். களத்தில் உள்ள பாதுகாப்புப் படையினரின் செயல்திறனை வலுப்படுத்துவதற்கும் திட்டங்களை விரைந்து முடிப்பதற்கும் இத்தகைய நிதி அதிகாரப் பகிர்வு முறை வழிவகுக்கும்.
ஆயுதத் தளவாடங்களின் கொள்முதலில் இறக்குமதி சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் தளவாட உற்பத்தியில் தற்சார்பு நிலையை அதிகரிப்பதற்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டிற்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறை சார்ந்த திட்டங்களுக்காக திருத்தியமைக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு 1.25 லட்சம் கோடிக்கும் அதிகமான பாதுகாப்புத் தளவாட சாதனங்களின் கொள்முதலுக்கு வழிவகுக்கும்.
அவசரகால செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக நிதி ஒதுக்கீட்டில் முப்படைகளின் தளபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு நிதி அதிகாரங்களும் கணிசமான அளவில் உயர்த்தப்பட்டுள்ளன. நிதி அதிகாரப்பகிர்வு முறையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் வாயிலாக பாதுகாப்புத்துறைச் சார்ந்த திட்டங்கள் குறித்து விரைவாக முடிவெடுப்பதன் மூலம் தளவாடக் கொள்முதலுக்கு உத்வேகம் அளிக்கும். இது பாதுகாப்புப் படைகளின் தேவைகளுக்கு ஏற்ப ஆயுத தளவாடங்கள் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்கிறது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் முப்படைகளின் தளபதி ஜெனரல் என் எஸ் ராஜா சுப்பிரமணி, ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படை தளபதி அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன், விமானப்படை துணைத் தளபதி ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர், பாதுகாப்புத் துறைச் செயலர் திரு ராஜேஷ்குமார் சிங் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268807®=3&lang=1
***
SS/SV/KPG/SH
(रिलीज़ आईडी: 2269036)
आगंतुक पटल : 12