மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

ஜெய்ப்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 08 APR 2026 4:24PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, பிரஹலாத்புராவிலிருந்து தோடி மோட் வரை 36 நிலையங்களைக் கொண்ட, 41 கிலோ மீட்டர் நீளமுள்ள இரண்டாம் கட்டத்திற்கு, 13,037.66 கோடி மொத்த திட்டச் செலவில் ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தை, மத்திய அரசும் ராஜஸ்தான் அரசும் 50:50 கூட்டு முயற்சியில், ராஜஸ்தான் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் மூலம் செயல்படுத்தும்.

இரண்டாம் கட்ட வழித்தடமானது, சீதாபுரா தொழிற்பேட்டை, விகேஐஏ, ஜெய்ப்பூர் விமான நிலையம், டோங்க் சாலை, எஸ்எம்எஸ் மருத்துவமனை வித்யாதர் நகர் போன்ற முக்கிய பகுதிகளுக்குத் தடையற்ற போக்குவரத்து இணைப்பை வழங்கும்.

தற்போது, ஜெய்ப்பூர் மெட்ரோவின் முதல் கட்டம், குறுகிய ஆனால் முக்கியமான 11.64 கிலோ மீட்டர் வழித்தடத்தில் தினசரி சராசரியாக சுமார் 60,000 பயணிகளுக்கு சேவை ஆற்றுகிறது. இரண்டாம் கட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், மெட்ரோ கட்டமைப்பில் பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என்றும், இது ஜெய்ப்பூரில் பொதுப் போக்குவரத்தின் பங்கை கணிசமாக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2250040&reg=3&lang=2

----

SS/PLM/KPG/SE


(रिलीज़ आईडी: 2268896) आगंतुक पटल : 29
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam